பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அணியறுபது

ஒ மயிலே! இப்பொழுது அவள் பிரிந்து போனதை நினைந்து உவந்து திரிகிறாய்! என் உயிர் அனைய அவளை நீ நேரே கண்டிருப்பாய்! ஆயிரம் கண்களை யுடைய நீ காணாமல் இருக்க முடியாது; அவள் போயுள்ள இடத்தை எனக்குக் கொஞ்சம் சொல்லமாட்டாயா? என்று கெஞ்சிக்கேட்டிருக்கின்றான். பிரிவின் பரிதாபத்தால் உள்ளம் கலங்கிப் பித்தனைப் போல் பிதற்றியுள்ளான். அந்த உண்மையை இங்கே உய்த்துணர்ந்து கொள்கிறோம். கவியைக் கருதிக் காணுங்கள் சுவைகளை ஒர்ந்து நுகர்ந்து கொள்ளுங்கள். ஆயிரம் கண் உடையாய்! என்றது தோகையில் தொடர்ந்து படர்ந்துள்ள எழிலானவிழியுருவங்களை.

ஆலமரம் விழுதுகளால் மேன்மையடைந்துளது

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

(நாலடி 197)


நைந்தடி யற்ற ஆலம் நடுங்கிவீழ் கின்றது என்று
வந்தவீழ் ஊன்றி வீழா வகைநிலை விளக்கு மாபோல்
மைந்தர்கள் தமக்குள் நல்லஅறிவினால் மகிழ்ந்து சேர்ந்து தந்தையைத் தளரா வண்ணம் தாங்குவர் தவத்தின்

(இராமாயணம்) [என்றான்.


ஆலுக்கு விழுதுகள் ஆதரவு புரிந்து வருதல் போல் தந்தைக்கு மைந்தர்கள் முந்துற உவந்து வந்து உதவி புரிவர் என இவை உணர்த்தியுள்ளன.

கோதையர் எனக் கூந்தலைக் கொண்டே மாதரைக் குறித்து வருதலால் பெண்மைக்கு அணியாய் அது மருவியுள்ள உரிமை அறியலாகும்.