பக்கம்:அணியும் மணியும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

நிலையினின்று வாழ்வில் தாழ்வு அடைவதும் துன்பத்திற்குக் காரணம் ஆகின்றது. இவையேயன்றி வறுமையால் வாடும் துன்பமும் அதனால் அடையும் இழிநிலையும் மக்களுக்கு ஏற்படுகின்ற பொதுத் துன்பங்கள் எனலாம். இவற்றால் தான் பொதுவாக அவல நிலை ஏற்படுகின்றது என்று கூறுவர்.

இவ்வாறு வரும் துன்ப நிகழ்ச்சிகளை இலக்கியம் ஓவியமாகத் தீட்டும்பொழுது அவலச்சுவை பிறக்கின்றது. இந்த அவல ஓவியங்கள், இவ்விலக்கியப் பகுதிகளைக் கற்பார் உள்ளத்தில் அழியா இடம் பெறுகின்றன.

நாட்டைவிட்டு இராமன் காட்டுக்குச் செல்கிறான் என்ற செய்தியைக் கேட்டுத் தசரதன் மட்டும் துன்பப்படவில்லை. அந்த நாட்டில் உள்ள மக்களும் பிற உயிர்களும் அழுதன என்று கம்பர் இராம காதையில் கூறும்பொழுது அக்காட்சி சிறந்த அவல ஓவியமாக அமைகிறது. இராமனது பிரிவால் அந்த நாட்டில் உள்ள ஆவும் அழுதன; அவற்றின் கன்றுகளும் அழுதன; அன்றலர்ந்த பூவும் அழுதன; பிள்ளையழுதன; கிள்ளை அழுதன என்று அந்தத் துன்ப உணர்வை எல்லா உயிர்கட்கும் ஏற்றிக் காட்டிப் படிப்பார் உள்ளத்தில் அவலச்சுவையை அவர் உண்டாக்கிவிடுகின்றார். மேலும், அதே தொடர்ச்சியில் பிற உயிர்களும் உயிரற்ற சோலை நீர் முதலியனவும் இராமன் பிரிந்தான் என்ற செய்தியால் அழுது கலங்கின என்று கூறுகின்றார்,

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்

- நகர் நீங்கு. 100

ஆவும் அழுத; அதன் கன்றழுத; அன்றலர்ந்த
பூவும் அழுத; புனற் புள்ளழுத; கள்ளொழுகுங்