இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
135
வினாக்களாகவும், விசாரணைகளாகவும், வேண்டுகோளாகவும் அமைந்து விட்டதால், உரை நடையைப் போல எழுச்சி மிக்கனவாக அமையவில்லை. அவற்றைக் கவிதைகள் என்று சொல்லுவதைவிடச் சிந்தனைக் குவியல்கள் என்று கூறலாம்.
திரு. வி. க. நடை தமிழ்நடைக்குக் கலங்கரை விளக்கமாக ஒளிதந்து பழமையைப் புதுமையோடு பிணைக்கிறது.
★★★