15
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
– 398
வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
– 595
என்ற குறட்பாக்களில், அதுபோல் என்ற உவம உருபு கொடாமல் கூறியிருப்பது அவர் சொற்சுருக்கத் திறனையே காட்டுகிறது. இதனை அணி நூலார் எடுத்துக்கர்ட்டு உவமை அணி என்று சிறப்பிப்பர்.
மற்றொரு வகையாகவும் சுருங்கச் சொல்லும் திறன் இவர்பால் காணப்படுகிறது. உவமையைவிட உருவகங்களாகக் கூறுவதில் சுருங்கச் சொல்லல் என்ற அழகு அமைகிறது. அவ்வாறு உருவகித்துக் கூறுங்காலும் முழுமையும் உருவகமாகக் கூறாமல் ஓரளவு உருவகமாகக் கூறிவிட்டு எஞ்சியவற்றை விடுவதில் சொற்சுருக்கம் காண்கின்றார்.
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து
– 1032
என்ற குறளில், உழுவார் தேரின் அச்சாணி போன்றவர்கள் என்று உருவகித்தாரேயன்றி ஏனையவற்றையெல்லாம் உருவகிக்கவில்லை. இஃது அவர் சொற்றிறனின் சிறப்பாகும். இதனை அவயவ உருவகம் என்று அணி நூலார் கூறுவர்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
– 1068
என்ற குறளும், இவ்வாறு அமைந்ததேயாகும். 'வறுமையாகிய கடலைக் கடக்க இரவு என்னும் பாதுகாப்பற்ற தோணி கரத்தல் என்னும் வன்னிலத்தின் தாக்குமாயிற் பிளந்துபோம்' என்பது இக்குறளின் கருத்தாகும். வறுமையைக் கடலுக்கு உருவகிக்-