பக்கம்:அணியும் மணியும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மகன் நின்றுகொன்டிருக்கப் போகின்றான். அவர்கள் இடும் ஏவலைத் தலைமேற்றாங்கி அடிபணிந்து கவலைக்குள் ஆழப்போகின்றான்" என்று கூறி, இருவேறு காட்சிகளை எடுத்துக் காட்டுகின்றாள். "எதற்காக நீ உவப்பது? வாழ்வில் நீ எதை நம்பி உறுதியோடு வாழ்கிறாய்?" என்று கூறி, அவள் உள்ள உறுதியையும் கொள்ளை மகிழ்வையும் மெல்லத் தகர்க்கிறாள்.

கைகேயியின் வருங்கால வாழ்வில் சூழ இருக்கும் இருளைச் சூழ்வினைக் கூனி எடுத்துக் காட்டுகிறாள். "அரசரில்லிற் பிறந்து, அரசரில்லில் வளர்ந்து, அரசரில்லில் வாழ்க்கைப்பட்டுப் பேரரசியாக விளங்கும் நீ கரையில்லாத் துயரக்கடலில் மூழ்கப் போகின்றாய்; சொன்னாலும் நீ கேட்கவில்லை" என்று கூறிப் பேரரசாகிய வாழ்வு ஒழியும் நிலையைக் காட்டித் தூய உள்ளத்தில் மெல்லக் களங்கத்தைப் புகுத்த முனைகிறாள்.

அரசரிற் பிறந்துபின் னரசரில்வளர்ந்
தரசரிற் புகுந்துபே ரரசி யானநீ
கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்
உரைசெயக் கேட்கிலை யுணர்தி யோவென்றாள்

– 160


உள்ளத்தில் தன்னலத்தை மூடியிருந்த திரையை விலக்க முற்படுகிறாள். 'உன் தன்னலம்தான் பெரியது' என்று சுட்டிக் காட்டுகிறாள். 'நீயும் மற்றவர்களைப் போலத் தன்னலத்துக் காகத்தான் வாழ்பவள். அதற்காக எதையுஞ்செய்யத் துணிபவள்' என்று குறிப்பாக உணர்த்துகிறாள். தன்னலம் என்ற விதைக்கு நீர் உளற்றி வளர்க்கத் தொடங்குகிறாள். கைகேயியின் மனத்தில் தன்னலத்துக்கும், அறத்தை அடிப்படையாகக் கொண்ட மனச் சான்றுக்கும் சிறிது போராட்டம் நடக்கிறது. தன்னலம், "ஏன் தான் தலையெடுக்கக் கூடாது?" என்று கேட்கிறது. மனச்சான்று.