பக்கம்:அணியும் மணியும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

இரந்து மன்றாடியும் அவள் தன் உறுதியில் சிறிதும் குறையவில்லை. அவள் உள்ளம் தீமையில் நிலைத்துவிட்ட நிலையை, ‘தன்னேரில்லாத் தீயவள் உள்ளந் தடுமாறாள்’ என்று கூறிக் கம்பர் காட்டுகிறார்.

தசரதன் அவளை இரந்து கேட்கும் இன்னுரைகளை அவள் செவிகள் கேட்கவும், அவற்றை ஏற்கவும் மறுத்து விட்டன என்பதை, ‘மரந்தான் என்னும் நெஞ்சினள் நானாள் வசைபாராள்’ என்று கூறி விளக்குகிறார்.

இன்றோர் காறும் எல்வளை யார்தம் இறையோரைக்

கொன்றாரில்லை கொல்லுதி யோநீ கொடியாளே

என்று, அவள் கொடுமையைத் தசரதன் காட்டுகிறான். வேறு வழியில்லாமல் ‘ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்’ என்று மனமுடைந்து கூறி, அவள் இனிப் பழிவெள்ளத்தில் மூழ்கித் தவிக்கப்போகும் இழிநிலையை எடுத்துரைக்கின்றான். அவள் இனி அடையப்போகும் அவலநிலை எத்தகையது என்று எடுத்துக் கூறுகிறான். அவன் உலகைவிட்டு அகலுவதால் அவள் அடையப் போகும் தனிமை நிலையாகிய விதவைக் கோலத்தையும், அவள் பொலிவிழந்து வாழ்விழந்து வசை பெற்று இசைகெட்டு அழியப்போகும் அவல வாழ்வையும் எடுத்துக் காட்டுகிறான்.

ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள
மாய்ந்தே நான்போய் வானுல காள்வென் வசைவெள்ளம்

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது

என்று கூறுகிறான்.

மகனைக் காட்டுக்கு ஏக ஒப்புதல் தெரிவித்த சொற்கள் அவன் நெஞ்சை ஈர்த்து அவனை வெந்துயரில் மூழ்க வைக்கின்றன. சிந்தை இழந்து, மனம் நொந்து, கீழே