41
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்
(ஊர்சூழ்வரி)
என்று உணர்த்தி, அவள் என்றும் காணாத்துயரத்தை அன்று காணுவதாகக் கூறுகிறார்.
“சுண்ணத் துகள் அவன் பொன்னிற மேனியிற் படிந்து அவன் வண்ணத்தை அழகு செய்தது. அத்தகைய மேனி இப்பொழுது மண்ணிற்கிடந்து புழுதி படிந்து பழுதுறுவது எங்ங்ணம் அடுக்கும்?” என்று அரற்றிக் கூறுகின்றாள்.
என்று, அவன் வெட்டுண்ட உடலைப் பார்த்துக் கட்டவிழ்ந்த மனத்தோடு கதறுகின்றாள். பொன் உறு மேனியில் இப்பொழுது துகள் தவழ்கிறதே என்று கேட்கிறாள். சுண்ணம் பூசிய மேனியில் மண்ணின் புழுதி படிவது அடுக்குமா என்று கேட்பதுபோல் இருக்கிறது.
இறுதியாக, வேறுபட்ட இரண்டு காட்சிகளை ஒருசேர வைத்துக்கூறிக கண்ணகியின் அவலத்து எல்லையை அளவிட்டுக் காண்பதுபோல் ஒப்புமைப்படுத்தி அமைக்கின்றார். மதுரை மாநகருள் புகுந்தபோது கணவன் துணையாக வந்த காட்சியையும், மதுரையை விட்டுத் தனித்து ஏகும்போது அவள் பெற்ற தனிமை உணர்வையும் ஒரே இடத்தில் அமைத்துக் கூறுகின்றார்.
காதற் கணவனோடு மதுரையில் கண்ணகி புகுந்த போது அவள் நிலைவேறு; அதைவிட்டுச் செல்லும் போது அவள் நிலைவேறு மாதவியோடு கொண்ட தொடர்பால் அறுந்துபோன இல்லற வாழ்வு, மீண்டும் கூடி இணைப்புண்டதால் செம்மையுற்றபடியால் வழிநடைத் துன்பத்திற்கும் வாழ்க்கை நெறிக்கும் அவன் தோள்கள் அவளுக்குத் துணையாக இருந்தன. கணவனையிழந்து, தனியே துன்பம் உழந்து, வறிதே மதுரையை