பக்கம்:அணியும் மணியும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

வண்டுகள் மருள்வதாகக் கூறுவதில் அவர் கற்பனைச் சிறப்பு அமைந்திருக்கிறது.

மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கய மென்றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து - 198

வண்டு தொடர்ந்து தரும் தொல்லையைக் கண்டு அவள் அஞ்சி வியர்த்துவிட்டாள் என்று கூறுவது நகைச்சுவையைத் தருகிறது.

தமயந்தியைப் பிரிந்து தனி வழி செல்லும் நளன் வழியில் தீயினியிடத்து அகப்பட்ட கார்க்கோடன் என்ற பாம்பை அதனினின்று காப்பாற்றிவிடுகிறான். அக் கார்க்கோடன் கொடுத்த சாபத்தால் நீலநிறம் பெற்று உருத்திரிந்து அவளைப் பிரிந்துவிட்ட பிரிவால் மனம் திரிந்து குழம்பிச் செல்கிறான். அவளைப் பிரிந்த ஆற்றாமையால் மனங்கலங்கி இன்னது செய்வது என்று தெரியாமல் திகைக்கிறான். வழியில் அவளைத் தனியே விட்ட தவற்றிற்காக மனம் வருந்துகிறான்.

மரக்கிளையொன்றில் நாரையொன்று உட்கார்ந்து கொண்டிருக்கிறது. பேசத்தெரியாத அதனிடம் பேசித் தன் துன்பத்தைக் குறைக்க முயல்கிறான். “திருநாடன் பொன்னை உறக்கத்தே நீத்து வந்துவிட்ட எனக்கு ஒன்றும் கூறாதிருக்கின்றாயே” என்று மனம் நொந்து பதில் சொல்லத் தெரியாத அப்பறவையிடம் பேசிக் கலங்குகிறான். ஆண் வண்டு ஒன்று புன்னைமரத்தில் அமர்ந்து அதன் பூவைக் கோதிக் கன்னிப்பெடை வண்டு உண்ணும்வரை காத்திருக்கும் அன்புச் செயலைக் கண்டு உள்ளம் அழிகிறான். காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்டுவந்த செயல் கொடுமை மிக்கது என உணர்கிறான். இவ்வாறு அவன் உள்ளத்தில் தோன்றும்