பக்கம்:அணியும் மணியும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத் தியற்கை
- காதை. 5,89-90

என்று உள்ள நெகிழ்ச்சியால் தோன்றிய உணர்வை எடுத்து இயம்புகின்றாள்:

மறுபடியும் அவள் உள்ளம் திண்மை பெறுகிறது. அதனால்,

இதுவே யாயின் கெடுக அதன்திறம் —காதை 5, 19

என்று கூறுகின்றாள். அவள் துறவு வாழ்க்கை புத்த சமயக் கோட்பாடுகளால் வலிமை பெறுகிறது. உதயகுமரனின் நெஞ்சு மட்டும் அவளைச் சுற்றியே வட்டமிடுகின்றது. அவளை எப்படியும் அடைய வேண்டும் என்ற ஆவல் அவள் இருக்கும் உலகவறவியாகிய அம்பலத்துள் கொண்டு செலுத்துகிறது. மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் அவளைப் பற்றிக் கொணர்ந்து, தன் தேரில் ஏற்றிக் கொணரும் எண்ணத்தோடு எழுந்து, உலகவறவியின் ஊடு சென்று அம்பலத்தை அடைகிறான். அவளும் அவன் அறியாவண்ணம் மறைந்து வதியும் நோக்கோடு காயசண்டிகை என்னும் வித்தியாதர மங்கையின் வடிவில் திகழ்கிறாள். உதயகுமரனுக்கு இளமையின் நிலையாமையைத் தக்க சான்றுகள் காட்டி உணர்த்துகிறாள். நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி,

தண்ணறல் வண்ணம் திரிந்துவே றாகி
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய்

—காதை 20, 41-42

என்று பலபடக் கூறி, இளமை நிலையாது என்று எடுத்துக் காட்டுகிறாள், அதே சமயத்தில், அவளைக் காயசண்டிகையே எனத் தவறாக உணர்ந்த அவள் காதலனான வித்தியாதரன் பழமைக் கட்டுரை பலகூறிப் பாராட்டவும், அவனோடு