பக்கம்:அணியும் மணியும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

பொருட்கிழி ஒன்றை எடுத்துக் கொடுக்குமாறு தன் அயலில் இருந்த கயல்விழியாளிடம் அப்பொருள் திரளின் அளவைக் கையால் குறிப்புச் செய்து காட்டி, அதனைக் கொண்டுவருமாறு ஏவுகிறான். வாய் திறந்து பேசும் ஆற்றலை இழந்துவிட்டதால் கைகாட்டிக் கருத்தை உணர்த்த முற்படுகிறான். அவன் கருத்தை உணர்ந்த அக் காரிகையாளும் அதன் குறிப்பை அறியாதவள் போல் நடித்து மறைத்துவிடுகிறாள். ஏழையின் சொற்கள் அம்பலம் ஏறாவாறுபோலக் கிழவனின் சொற்கள் செயலில் இடம்பெறவில்லை. சுற்றியிருக்கும் சுற்றத்தாரும் அவன் கூறுவதை உணர முடியவில்லை.

“ஐயா விளாம்பழமா கேட்கின்றீர்? அஃது உடம்புக்கு ஆகாதே. தொண்டை அடைக்கும் இந்நிலையிலா விளாம்பழம் உண்பது” என்று மிகவும் அன்புடையாளைப் போலப் பேசி அவன் குறிப்பை மறைத்து விடுகிறாள். அவன் எவ்வளவு முயன்றும் தன் கருத்தைத் தெரிவிக்க இயலவில்லை. அவள் தன் திறமையால் அவன் கருத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்துச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தவர்க்கும் சாய்ந்து கிடக்கும் கணவனுக்கும் நல்லவளைப் போல நடித்து அவன் செயல் எடுபடாதவாறு செய்து விடுகிறாள். அவன் பொதித் துணையின் அளவைக் கையாற் குறிப்புச் செய்து காட்ட, “ஐயோ!உடம்புக்கு ஆகாதே” என்று கூறி மெய்யானவள் போல நடித்து அறத்தைச் செய்யாதவாறு தடுத்துவிடுகிறாள். இளமையிலேயே அறம் செய்யவேண்டும் என்ற செய்தியைச் சுவைமிக்க சூழ்நிலையில் வைத்து உணர்த்தக் காண்கிறோம்.

கையாற் பொதித்துணையே காட்டக்
    கயற்கண்ணாள் அதனைக் காட்டாள்;
ஐயா விளாம்பழமே என்கின்றீர்;
    ஆங்கதற்குப் பருவம் அன்றுஎன்
செய்கோ எனச்சிறந்தாள் போற்சிறவாக்
    கட்டுதரையாற் குறித்த எல்லாம்