பக்கம்:அணியும் மணியும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

8. நன்மையும் உண்மையும்


லக்கியம் உண்மை நன்மை அழகு என்ற மூன்று பொருள்களையும் ஒரு சேர உணர்த்துகிறது. தத்துவமும் விஞ்ஞானமும் உண்மையை மட்டும் உணர்த்தும்; நீதி நூல்கள் நன்மையை மட்டும் உணர்த்தும்; இசை ஓவியம் முதலிய கலைகள் அழகை மட்டும் உணர்த்தும். இலக்கியம் ஒன்றுதான் நன்மையோடு கூடிய உண்மையை அழகுணர்வோடு ஈந்து உள்ளத்துக்கும் அறிவுக்கும் விருந்து செய்து வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறது.

உண்மைக்கும் நன்மைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் நுட்பமானதாகும். நன்மை என்பது வாழ்க்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய அறப்பகுதிகளை வகைப்படுத்திக் கூறுவதாகும். உண்மை என்பது உலகத்தின் இயல்பை அறிந்து உணர்த்துவதாகும். இலக்கியம் காட்டும் உண்மை நன்மையோடு அமைந்து யாவருக்கும் பொருந்துவதாகவும், பலருக்கும் பயன்படுவதாகவும் அமைகின்றது. இலக்கியம் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து அனுபவத்தோடு உண்மைகளை உலகத்தின் நன்மை கருதி அழகு பட எடுத்துக் காட்டுகின்றது.

இவ்வாறு நன்மையோடு கூடிய உண்மைகளைத் தமிழ் இலக்கயம் ஆங்காங்கு எடுத்துக் காட்டுவதை நாம் காணமுடிகிறது. தொடர்நிலைச் செய்யுள்களான பெருங் காப்பியங்களாயினும் தனிநிலைச் செய்யுள்களான சங்கவிலக் கியங்களாயினும் இத்தகைய உண்மைகளை ஆங்காங்கு