பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அணுவின் ஆக்கம்


களைவிட அதிகமாகச் செல்லுகின்றன; விரைவாகவும் செல்லுகின்றன. இவ்வாறு யு-285ன் அடர்வு அதிகரிக்கப் பெறுகின்றது. இவ்வாறு மீண்டும் மீண்டும் பல திரைகளினுடே யுரேனிய ஹெக்ஸாபுளோரைடு வாயுவைச் செலுத்திச் சிறிது சிறிதாக யு-285ன் அடர்வை அதிகரிக்கச் செய்யலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் ஆயிரக்கணக்கான தடவைகளில் திரைகளின் வழியாகச் செலுத்தித் தூய்மையான யு-235ஐ அடைகின்றனர். இங்ஙனம் செய்வதற்குப் பல மாதங்கள் ஆகின்றன. வாயுவும் பல மைல் நீளமுள்ள குழாய்களில் வாயு பரவும் இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் பல மாத காலம் மெதுவாகச் சுற்றி வெளிவர வேண்டும். இவ்வாறு வெளிவரும் யு-285 மிகவும் துரய்மை யானது. இதிலிருந்து யு-285ஐ உலோக வடிவமாக்குகின்றனர்.

யுரேனியத்தின் ஓரிடத்தான்களைப் பிரிக்கும் முறையைப் போன்ற கடினமான ஒரு செய் முறையை எண்ணிப் பார்த்தாலும் இயலாது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், டென்னெஸி[1] மாநிலத்தில் ஒக் ரிட்ஜ்[2] என்ற இடத்தில் யுரேனியத்தைப் பிரிக்கும் தொழிற்சாலையொன்று நிறுவப்பெற்றுள்ளது. அங்குள்ள பம்புகளை இயக்குவதற்குப் பயன்படும் மின்குற்றல் நியூயார்க்[3] நகரில் பாதியளவுக்கு வினியோகம் செய்யப்பெறும் மின்னுற்றலுக்குச் சமமானது. மாபெருங் கட்டடங்களையும் பல மைல் நீளமுள்ள குழாய்களை யும் கம்பி களையும் மிகவும் துணிச்சலான உழைப்பாளிகளையும் இத்தொழிற்சாலையில் காணலாம்.

இங்கு சுமார் ஒரு மைல் நீளமும் நான்கு மாடி உயரமும் கொண்ட ஒரு மாபெருங் கட்டடம் ஒன்று உண்டு. அதில் நன்கு மூடப்பெற்ற குழாய்கள் அமைந்துள்ளன. சாதாரண உலோகத்தினுல் இக்குழல்களை அமைத்தல் இயலாது. காரணம், இந்த வாயு உலோகத்தை அரித்துத் தின்றுவிடும்; சில உலோகங்கள் இந்த வாயுவில் எரியவும்


  1. டென்னெஸி-Tennessee.
  2. ஒக் ரிட்ஜ்-Oak Ridge.
  3. நியூயார்க்-New york.