பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு எரியைகள்

93


எனவே, அணு எரியைகளை இயற்கையில் கிடைக்கும் கனிப் பொருள்களிலிருந்து பிரித்தெடுப்பது மிகச் சிக்கலானது என்றும், செலவும் மிக அதிகமாகும் என்றும் அறிகின்றோம். அணு உலைகளை இயக்குவதற்கு பெளதிக விற்பன்னர்களுக்குப் பிரத்தியேகமான அறிவு தேவைப்படுதல் போலவே, அணு எரியைகலளை உண்டாக்குவதற்கும், வேதியல் அறிஞர்கட்குப் பிரத்தியேகமான அறிவு தேவைப்படுகின்றது. அன்றியும், இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு மிகச் சிக்கலான கருவித் தொகுதிகளும்[1] இயந்திரத் தளவாடங்களும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இவற்றையெல்லாம் மிக நன்றாக வளர்ச்சி பெற்ற வேதியற் தொழில் சாலையில்தான் காணமுடியும். இவற்றிலிருந்தும், யுரேனியக் கணிப் பொருள்கள் உலகில் சில நாடுகளில் மட்டிலும்தான் கிடைக்கின்றன என்பதிலிருந்தும், அணு எரியைகளை எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்ய முடியாது என்பதை அறிகின்றோம்; சிலகாலம் வரையிலுமாவது பெரும்பாலான சில நாடுகளால் அது சாத்தியப்படாது என்பது உறுதி. இவற்றை உற்பத்தி செய்யும் சில நாடுகள் தாம் இவற்றைக் கொண்டு மின்னாற்றல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு, வழங்க வேண்டும்.


  1. கருவித் தொகுதி - equipment.