பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அணு உலைகள்


ணுயுகத்தில் வாழும் ஒரு குடியானவனும் ஒரு சாதாரண மனிதனும் அணுவாற்றலை மின்னுற்றலாகவே கருதுவர். இந்த யுகத்தில் மின்னாற்றல் இல்லாத இடங்களில் மின்னாற்றல் எளிதில் கிட்டும்; அது கிடைத்து வரும் இடங்களில் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். இன்னும் ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால், அது குறைந்த விலைக்கும் கிடைக்கும். உற்பத்தி நிலையங்களிலிருந்து அது இன்றுள்ளது போலவே கம்பிகள் வழியாகவே பாய்ந்து செல்லும். இன்றுள்ள நீர்-மின்சார நிலையங்களைப்[1] போலவே, அணுவாற்றல் நிலையங்களும் பெரிய வடிவில் இருக்கும் அமைப்பும் மிகச் சிக்கலானதாகவே இருக்கும். அவற்றை அமைப்பதற்கு ஏராளமான பணம் செலவாகும். அரசாங்கம் அல்லது பெரிய தொழிற் கம்பெனிகள் தாம் அவற்றை நிறுவ இயலும். மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்ற பொறி இயல் வல்லுநர்களும் அறிவியலறிஞர்களுமே அவற்றை இயக்குவார்கள். பெரிய நீர்த்தேக்கத்திலிருந்து வேகமாக வெளிப்படும் நீரிலிருந்து பெறும் ஆற்றலே மின்னுற்றலாக மாற்றுவதற்குப் பதிலாக, அணு உலைகளில்[2] கட்டுப்படுத்தப்பெறும் நிலைகளில், அணுவின் உட்கருக்களிலுள்ள பிணைப்பாற்றலை மின்னாற்றலாக மாற்றுவார்கள்.

அணு உலை என்ற பெயர் வழங்குவதற்குக் காரணம் என்ன? இந்தச் சாதனத்தின் சூட்டு நிலை மிக உயர்ந்திருக்-


  1. நீர்-மின்சார நிலையம்- hydro-electric station.
  2. அணு உலைகள்- atomic furnace (reactor).