பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு உலைகள்

97

கும். ஒரு பொது இயல் மின்னி இப்பொருளைத் தாக்கியவுடன் பக்குவிடுதல் அல்லது பிளவுறுதல் தொடர்ந்து நடைபெறுகின்றது. அணுக்களிலிருந்து பறந்து வரும் துணுக்குகள் பெருவேகத்துடன் வெளிவருகின்றன; அவை ஆற்றல் முழுவதையும் சூடாகச் சுமந்து செல்லுகின்றன. இந்தக் கிரியை சேய்மையிலுள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து வரும் அண்டக்கதிரை உட்செலுத்தித் தானாகத் தொடங்கும்படி செய்யப் பெறுகின்றது. ஒரு தடவை தொடங்கிவிட்டால், திரியை தொடர்ந்து நடைபெறும். காரணம் என்ன? வெடிக்கும் ஒவ்வொரு அனுக்கருவிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று பொது இயல் மின்னிகள் விடுவிக்கப் பெறுகின்றன. இவற்றுள் சில அண்மையிலுள்ள அணுக்கருக்களைத் தாக்கி அவற்றையும் வெடிக்கச் செய்கின்றன; இது தான் தொடர்நிலை விளைவு என்பதும், தன்னுடைய ஆற்றலைக் கொண்டே எப்பொழுது முடிவுறும் என்பதில்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பதும், இத்தொடர்ச்சியை நிஜலநிறுத்துவதற்குத் தேவையான அளவு பக்குவிடும் பொருள் இருக்கவேண்டும் என்பதும் நமக்கு தெரியும்.

தணிப்பான்[1]: அணு உலையின் உள்ளகத்தில் நடை றும் தொடர்நிலை விளைவால் வெளிவரும் பொது இயல் மின்னிகளின் பெரு விசையைக் குறைப்பதற்கு உபயோகப் படுத்தப்பெறும் பொருள்கள் தணிப்பான்கள் என்று வழங்கப் பெறுகின்றன. இந்தப் பொது இயல் மின்னிகளின் வேகம் ஒளியணுக்களின் வேகத்தை ஒத்திருக்கும். அவை மின்சார நடுநிலை வகிப்பதால் அவை இந்த வேகத்தில் மிகவும் துளைத்துச் செல்லக்கூடிய தன்மை வாய்ந்தவை. ஆதலால், அவை உள்ளகத்தை-ஏன் அணு உலையையே துளைத்துக்கொண்டு எளிதில் தப்பி வெளியே வரக் கூடியவை. இவ்வாறு தப்பி வெளிவரும் மின்னிகளால் யாதொரு பயனும் இல்லை; அவை அணு உலைக்கு ஏற்படும் நஷ்டமே. இதனைத் தணிப்பான்கள் தடுக்கின்றன. அவை பொது இயல் மின்னிகளின் வேகத்தைத் தணிக்கின்றன. பொது இயல் மின்னிகள் தணிப்பான்களைத் தாக்-


  1. தணிப்பான்-26

53-8