பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு உலைகள்

99


 12 மடங்கு கனமானது ; ஆகவே, அது சாதாரணமாக பெரும்பாலான திடப்பொருள்களைக்காட்டிலும் இலேசானது என்றே சொல்லவேண்டும். அன்றியும், பென்சில் கரி பேரளவில் குறைந்த அடக்க விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருப்பதால் அப்பொருளாலான கோல்கள் - தாம் பெரும்பாலான அணு உலைகளில் தணிப்பானாகப் பயன்படுகின்றன.

கட்டுப்படுத்தும் கோல்கள் :[1]எல்லாவற்றையும் தக்க முறையில் அமைத்து விட்டால், தொடர்நிலை விளைவு தானாகவே தொடர்ந்து நடைபெறுகின்றது ; அதை அப்படியே தொடர்ந்து நடைபெறுவதற்கு எவ்வித முயற்சியோ கவனமோ தேவையில்லை. ஆயினும், மிக விரைவாகவோ அதிகமாகவோ நடைபெறாது அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். எனவே, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய,-வேண்டுமானால் குறைத்து நிறுத்தவும் வல்ல-சாதனம் ஒன்று இருக்கவேண்டும் என்றாகிறது. ஓர் அணு உலையில் இச்சாதனம் மிக எளிதாக அமைக்கப் பெறுகின்றது. பொது இயல் மின்னிகளை விழுங்கித் தான் யாதொரு விதமாற்றமும் அடையாத பொருளாலான கோல்கள் அல்லது தகடுகளை அமைத்து அவற்றில் இப்பொது இயல் மின்னிகளைத் தாக்குமாறு செய்து இச்சாதனத்தை அமைக்கின்றனர். அத்தகைய பொருள்கள் கிடைப்பது மிகவும் அரிது. ஆயினும், சாதாரணமாகக் கிடைக்கும் போரான்[2]காட்மியம் என்ற இரண்டு பொருள்கள் அச்செயலே நன்றாக நிறைவேற்றுகின்றன. இவ்விரண்டிலும் காட்மியம்தான் நடைமுறைக்கு மிகவும் உகந்தது. எனவே, வெளியிலிருந்து காட்மியம் கோல்களை உள்ளகத்தில் செருகி நாம் விரும்புக் பொழுது அவற்றை எடுப்பதற்கும் மீண்டும் வைப்பதற்கும் ஏற்றவாறு அமைத்த அணு உலைகள் நிறுவப்பெறுகின்றன, இந்தக் கோல்கள் சரியாக வைக்கப் பெற்றுவிட்டால் அவை தானாகப் பக்குவிடும் எரியையின் ஒரு சில அணுக்களினின்-


  1. 11 கட்டுப்படுத்தும் கோல்கள்-control rods,
  2. 12 போரான்