பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அணுவின் ஆக்கம்


எனவே, குளிர்ப்பான் என்ற பகுதி அணு உலையை அதிகச் சூடாகாமல் பாதுகாப்பதுடன், சூட்டினை உற்பத்தி செய்யும் உலையையும் இந்தச்சூட்டினே மின்சாரமாக மாற்றும் ஆற்றல் நிலையத்தினையும் இணைக்கும் இன்றியமையாத சாதனமாகவும் பயன்படுகின்றது. இதனைப் பின்னர்க் காண்போம்.

காப்புறை[1] : அணுஉலை இயங்குவதில் முக்கிய பங்கு கொள்ளாவிடினும், இன்னொரு முக்கிய பகுதி அணுஉலையில் இன்றியமையாததாக உள்ளது ; அதுதான் காப்புறை எனப்படுவது. அது மிகவும் பளுவான பெரும் பகுதியாகும்; உலை முழுவதும் சூழ்ந்திருக்கும் பகுதி அது. உலையினுள்ளிருந்து ஊடுருவிக் கொண்டு வெளிவரும் கதிர்கள் வேலை செய்வோரைத் தாக்காமல் பாதுகாக்க இக் காப்புறை பயன்படுகின்றது. அணு உலைகளில் இரண்டுவித விபத்துக்கள் நிகழும். ஒன்று: பயன்படுத்துவதற்கு எவ்வளவோ முயன்றும் அதில் கட்டுப்படாமல் மிக உயர்ந்த வேகத்துடன் வெளிப்படும் பொது இயல்மின்னிகள்; இரண்டு: உட்கரு வெடித்தலால் உற்பத்தியாகி வெளிவரும் காமா - கதிர்கள். காமா - கதிர்கள் என்பவை புதிர்க் கதிர்களை விட மிகவும் ஊடுருவிச் செல்லக் கூடியவை; குறைந்த அலை நீளங்களேயுடைய கதிர்வீச்சாக வெளிப்படுபவை. பொது இயல் மின்னிகள் குறைந்த நேரம் தாக்கினாலும் உயிருக்கு ஆபத்து விளையும் ; சற்று அதிக நேரமிருந்தால் காமா - கதிர்களும் மறலித் தன்மையை விளைவித்துவிடும். எனவே, கிட்டத்தட்ட ஏழடி கனமுள்ள கப்பியாலான காப்புறை யொன்று அணுஉலையின் எல்லாப் பக்கங்களும் சூழ்ந்திருக்குமாறு அமைக்கப் பெறுகின்றது. இது இந்தக் கதிர்களை உறிஞ்சி விடுகின்றன. குறைந்த கனமுள்ள எஃகு அல்லது காரியே காப்புறையையும் பயன்படுத்தலாம். ஆனால் உறிஞ்சும் செயல் பளுவான அணுக்களை கொண்ட தடித்த சுவர்களில் தான் நடைபெறும்; பிறவொன்றிலும் அச்செயல் நடைபெற இயலாது.


  1. காப்புறை - shield