பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖合3 அணுவின் ஆக்கம்

நீராவி ஒரு பல் சக்கர உருளையைச் சுழற்றுகிறது ; இது மின்னுக்கப் பொறியின் பிண கையைச் சுற்றி மின்னுற்றிலே உண்டாக்குகிறது. பெரும்பாலான அறிவியல் நிபுணர்கள்" பிரீடர் அணு உலையை மிகவும் சிறந்தது என்று சொல்லு கின்றனர். ஏனெனில், அந்த உலே பக்குவிடக்கூடிய எரியையை உண்டாக்குகிறது ; அதே சமயத்தில் மின்னுற் றலையும் உற்பத்தி செய்கிறது. முதன் முதலாக நிறுவப் பெற்ற சோதனை பிரீடர் அணு உலேயில், தான் உண்டாக் கின எரியையைவிட அதிகமான எரியையை விழுங்கியது. ஆயினும், இன்று பல அறிஞர்கள் ஆராய்ந்து அமைத்துள்ள அணு உலைகளில் உபயோகப் படுத்தப்பெறும் எரியையை விட அதிகமான எரியை உற்பத்தி செய்யப் பெறுகின் றது. அண்மையில் ஆங்கில நாட்டு அறிவியலறிஞர்கள் அமைத்த பிரீடர் உலேயில் செலவாகும் எரியையைவிட இருமடங்கு எரியை உற்பத்தியாகிறது என்று அறிகின் ருேம்.

புதிய அணு உலகில் ஒரு அணு உலே தான் உபயோ கிக்கும் எரியையைவிட அதிகமான எரியையை உண்டர்க் குதல் மட்டிலும் ஒரு வியப்பன்று. பல்வேறு சிறந்த அம்சங் களில் இதுவும் ஒன்று. எதிர்காலத்தில் நிலக்கரி முதலிய வேறு எரியைகளைப் பயன்படுத்தும் மின்னுற்றல் நிலையங் களுக்குப் பதிலாக அணுவாற்றல் நிலையங்களே எங்கும் அமைக்கப்பெறலாம் என்று நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்,

பலவகை உலைகள் : இன்று பல்வேறு பிரத்தியேகமான அணு உலைகள் சோதனை நிலையில் உள்ளன. ஓர் உலயில் எரியையாகப் பயன்படும் யுரேனியக் கோல்களுக்குப் பதி லாக யுரேனிய உப்பு நீர்க் - கரைசலை (நைட்ரேட் அல்லது சல்பேட்) உபயோகிக்கின்றனர். இது எரியையையும் தணிப் பானையும் ஒன்ருக இணைக்கிறது. இது ஒர் எஃகாலான பாத்திரத்தில் வைக்கப்பெற்றிருக்கிறது; இதைச் சுற்றிலும் சுருளாக அமைந்துள்ள குழல்களில் நீர் சுற்றிக்கொண்டு

  • Lisbråås a (jär - turbine. * 13&or Soč - armature. * Éuqs Grifē6ir - experts. .