பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அணுவின் ஆக்கம்


பாடுகளை அறிந்து கொள்ளுதல் பொருத்தமானதும் இன்றியமையாததுமாகும். இரண்டிலும் சூடு உண்டாதல், இறுதியில் சாம்பர் எஞ்சுதல் ஆகிய அம்சங்களில் மட்டிலும் தான் இரண்டு வகையும் ஒரு மாதிரியாகவுள்ளன. கீழ்க்கண்டவற்றை மிகவும் முக்கியமான வேறுபாடுகளாகக் கருதலாம்.

1. இரண்டுவகை உலைகளிலும் உண்டாகும் சூட்டின் அளவு பெரிய அளவில் வேறுபடுகின்றது. ஓர் இராத்தல் யு-235 யுரேனியத்தைத் தொடர்நிலவிளைவு முறையில் எரிப்பதால் ஓர் இராத்தல் நிலக்கரி தரும் சூட்டைவிட 2,600,000 மடங்கு சூடு அதிகமாக வெளிப்படும். இதுதான் அணு உலை அமைப்பதற்குப் பெருங்காரணமாக இருக்கின்றது.

2. அணு உலைகளுக்குக் காற்று தேவையில்லை ; ஏனைய உலைகள் காற்றிருந்தால்தான் இயங்கும். அணு உலைகள் கண்ணுக்குப் புலனாகாத பல கோடிக் கணக்கான பொது இயல் மின்னிகளால் இயக்கப்பெறுகின்றன. பொது இயல் மின்னிகள் அணுக்களைப் பிளவுறச் செய்வதோடன்றி, தொடர்நிலை விளைவில் அவை அதிகமாக உற்பத்தியாவதற்கும் காரணமாகவுள்ளன. ஆகவே, பூமிக்குள் அமைக்கப் பெறும் தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலுமுள்ள இயந்திரங்கள் இயங்கவும், நீர்மூழ்கிக் கப்பல்களிலும், யுரேனிய இயந்திரங்கள் பயன்படலாம். பூமியிலிருந்து கிளம்பிச் சந்திரனைம் ஏனேய கோள்களையும் அடைய அறிவியலறிஞர்கள் நீண்ட நாட்களாகவே முயன்று வருகின்றனர். அண்மையில் வானத்தில் பறந்து சென்று இப் பூமண்டத்தைப் பலமுறை சுற்றிய இரண்டு இரஷ்யச் சந்திரன்களையும் கண்டோம். புவிக் கவர்ச்சியைத் தாண்டி அப்பாற் செல்லத் தேவையான ஆற்றலை அணுப் பிளவினால் தான் பெற முடியும். சந்திர மண்டலத்திற்குப் போகவேண்டும் என்ற அறிவியலறிஞர் களின் நெடுநாட் கனவும் விரைவில் நனவாகக் கூடும்.

3. ஏனைய உலைகளில் பூமியிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் நிலக்கரி, கட்டைகள், பெட்ரோலியம் போன்ற எரியைகள் பயன்படுகின்றன. ஆனால், அணு உலைகளில் இயற்கையாகக் கிடைக்கும் யு-235 மட்டிலும்தான் பயன்