பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 16 அணுவின் ஆக்கம்

பெருக்கத்தை ஐக்கிய நாட்டு ஸ்தாபனத்தின் உட் கழகமா கிய உணவு - உழவுத் தொழில் கழகம் கவனித்து வருகின் றது. மக்களின் சுகாதார வசதிகளைக் கவனிக்கும் பொறுப்பு உலகச் சுகாதாரக் கழகத்தினிடம் உள்ளது. ஆற்றல் உற்பத்திப் பெருக்கத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி - அறி வியல் - பண்பாட்டுக் கழகம்" கவனித்து வருகின்றது.

மின்னுற்றலை அதிகம் உபயோகிக்காத நாடுகளில் இன்று நடைமுறையில் பயன்பட்டு வரும் எரியைகளின் பற்ருக்குறை இருந்து வருகின்றது என்பது வெளிப்படை. எல்லா நாடுகளிலுமுள்ள எல்லோருடைய வாழ்க்கைத் தரத் தையும் உச்சநிலைக்கு உயர்த்தினுல் இவ்வுலகிலுள்ள நிலக் கரி, எண்ணெய்ப் படிவுகளிலிருந்து கிடைக்கும் பொருள் கள் இருபதாண்டுகளுக்குத் தான் போதுமானதாக இருக்கும், ஆளுல், இதுகாறும் கண்டறிந்த யுரேனியம், தோரியம் மூலங்களிலிருந்து கிடைக்கும் பொருள்கள் குறைந்தது 500 லிருந்து 1000 யாண்டுகள் வரையிலும் போதுமான தாக இருக்கும் என்று அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். அன்றியும். நிலக்கரியைப் பயன்படுத்துவதில் ஒரு கஷ்டம் உண்டு. நிலக்கரி கிடைக்கும் கனிகளிலிருந்து அது பயன் படும் இடங்களுக்குப் பல இலட்சக் கணக்கான டன் நிலக் கரியைக் கொண்டு செல்வதற்கு ஏராளமான வண்டிச் சத்தம் ஆகிறது. கொண்டு வருவதற்குரிய உழைப்பு ஒரு புறமிருக்க, ஆற்றலின் அடக்க விலையும் அதிகரிக்கின்றது. அணுவாற்றலைப் பயன்படுத்துவதில் இக்குறை நீங்குகிறது. ஒரு டன் அணு எரியைகளிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 2,500,000 டன் நிலக்கரியிலிருந்து கிடைக்கும் ஆற்றலுக் குச் சமம். அணு எரியைகளைப் பயன்படுத்துவதில் கொண்டுவரும் உழைப்பு குறைவதுடன், வண்டிச் சத்தமும்

உணவு - உழவுத்தொழில் கழகம் - Food and Agricultural Organization.

ஐக்கிய நாடுகளின் கல்வி - அறிவியல் - பண்பாட்டுக் esposib-United Nations Educational Scientific and Cultural Organization. ‘Uto-Suáš - deposits.