பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அணுவின் ஆக்கம்


 யொன்று 1200 இராத்தல்கள் அமுக்கத்திலுள்ள நீராவியால் இயங்கும் பொறியில் பயன்படுத்தப்பெறும் நிலக்கரியைப்போல் இரண்டு பங்கு நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டும். உயர்ந்த அமுக்கத்தில் நீராவியின் சூட்டுநிலை 1200 F-க்குமேல் உள்ளது. இக்காரணத்தால் தான் பொறி இயல் நிபுணர் அணு உலையை மிக உயர்ந்த சூட்டு நிலையில் இயக்க விரும்புகின்ர் ; நீராவிக் கொதி கலங்களுக்கு 1000" F-க்குமேல் சூட்டைக் கொண்டுவரும் குளிர்ப்பானையும் பயன்படுத்த விழைகின்றார். எனவேதான், அணு உலைகளை அமைப்பதற்கு ஸ்ர்க்கோனியம்[1] போன்ற புதிய அமைப்புப் பொருள்களைத் தேடியலைகின்றனர் ; குளிர்ப்பானாக உபயோகப்படுத்துவதற்கும் உயர்ந்த திரவ உலோகங்களை நாடுகின்றனர். இத்தகைய பொருள்கள் உயர்ந்த சூட்டுநிலையைத் தாங்குவதுடன் அணு உலைகளில் பொது இயல் மின்னிகள் தம்மைத் தீவிரமாகத் தாக்கும் பொழுதும் தம்முடைய வன்மையையோ பிற பண்புகளையோ இழக்காது இருக்கவேண்டும். ஸ்ர்க்கோனியம் என்ற உலோகம் எஃகுக்குப் பதிலாகச் சிறந்த இடத்தைப் பெறுகின்றது; உழைக்கவும் செய்கின்றது. ஆனால், புதிதாக இருப்பதால் அதன் விலை அதிகமாகவுள்ளது. சில ஆண்டுகளுக்குள் அதன் விலை இராத்தல் ஒன்றுக்கு 300 டாலரிலிருந்து 15 டாலருக்கு இறங்கிவிட்டது ; அதன் உற்பத்தி பெருகவே, அதன் விலை இன்னும் இறங்கும் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. புதிய அணுவாற்றல் தொழிற்சாலையில் நாம் காணும் பலவித பொறி இயல் பிரச்சினைகளுக்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும்.

இன்னொரு சங்கடமும் உண்டு. குளிர்ப்பான் அணு உலையிலிருக்கும் பொழுது பொது இயல் மின்னிகளின் பலமான தாக்குதலால் அதுவே கதிரியக்கத் தன்மையைப் பெறுகின்றது. ஆகவே, அது வெளிவிடும் துளைத்துச் செல்ல வல்ல கதிர்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இக்காரணத்தால் அது


  1. 7 ஸ்ர்க்கோனியம் - zirconium