பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னாற்றல்

119


உலையிலிருந்து ஒரு "சூடு மாற்றிக்கு"க்[1]கொண்டு செலுத்தப் பெற்று அங்கு வேறொரு குளிர்ப்பான் வட்டத்தால் குளிர்விக்கப் பெறுகின்றது. இந்தத் திரவம் மிகச் சூடாகின்றதேயன்றி கதிரியக்கத்தைப் பெறுவதில்லை. இந்த இரண்டாவது குளிர்ப்பான் கொதிகலங்களை[2], அடைந்து அங்குள்ள நீரை அதிக அமுக்கமுள்ள நீராவியாக மாற்றுகிறது. இந்த நீராவி, நீராவிப் பல் சக்கர உருளைகளை இயக்க, அவற்றால் மின்னாக்கப் பொறிகள் இயக்கப் பெறுகின்றன. இந்த மின்னாக்கப் பொறிகளினின்றும் மின்னாற்றல் வெளிப்படுகின்றது.

அடக்க விலை : அணுவிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றப் பெற்றவுடன் அது நடைமுறையில் பயன்படக்கூடும் என்று சொல்ல முடியாது. அது பெரிய தொழிலகங்களிலும் பிற இடங்களிலும் பேரளவில் பயன்பட வேண்டுமானால், ஆற்றல் குறைந்த விலைக்குக் கிடைக்க வேண்டும். அணுவாற்றலிலிருந்து கிடைக்கும் மின்னாற்றலின் விலைக் குறைவே அதன் சிறந்த எதிர் காலத்தை நிர்ணயிக்கும். இன்றைய நிலையில் மிகத் தொலைவான இடங்களிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளில் அணுவிலிருந்து பெறும் மின்னாற்றல் ஒரளவு குறைவாகவே இருக்கும் என்று கருதலாம்; நிலக்கரி எளிதாகவும் குறைவான விலைக்கும் கிடைக்கக் கூடிய நாடுகளில் அணுவாற்றலிலிருந்து பெறும் மின்னாற்றலின் விலை சற்று அதிகமாகவே இருக்கலாம். இந்த அம்சங்கள் யாவும் நிலக்கரி கிடைப்பதைப் பொறுத்தவை.

அணுவாற்றல் நிலையங்களை அமைக்கும் செலவை ஒருவாறு உத்தேசமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், இதனை அமைக்கும் செளகரியங்களே ஓரளவு அறிந்துகொள்ளலாம். நீராவியிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் செலவு இன்றைய அதே அளவு நீராவி மின்னாற்றல் நிலையத்திலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்வதற்கு ஆகும்


  1. சூடு மாற்றி- “heat exchanger”.
  2. கொதிகலங்கள்-boilers