பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னாற்றல்

121


 செலவுதான் ஆகிறது. ஏனெனில், அந்த நிலை அமைப்பு இயங்குவதிலோ அதற்குரிய தேவையான கருவித் தொகுதிகளிலோ[1]யாதொரு வேற்றுமையும் இல்லை. வேற்றுமை எல்லாம் நீராவியை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவில் தான் இருக்கிறது. இந்தச் செலவு எரியையின் அடக்க விலை, நிலையத்தை நடத்தும் செலவு, தொடக்கத்தில் போட வேண்டிய முதலீடு ஆகியவற்றைப் பொறுத்தது (படம்-18).

அணு எரியையைப் பொறுத்த மட்டிலும் அதன் விலை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாத அளவுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. பக்குவிடக் கூடிய யு-235ன் விலை இராத்தல் ஒன்றுக்கு 10,000 டாலர் ஆகிறது ; இது மிக உயர்ந்த விலை என்பது உண்மைதான். ஆயினும், இது தொடக்கத்தில் போடவேண்டிய முதலீட்டின் ஒரு சிறு பகுதியே. அது பிரீடர் விதிப்படி சதா புதிய புளுட்டோனியத்தால் அது திரும்பவும் ஈடு செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. இதில் உண்டாகும் புதிய புளுட்டோனியம் யு-235ஐப் போலவே ஆற்றலைப் பெற்றுள்ளது. எனவே, புளுட்டோனிய உற்பத்தியில் உபயோகப்படும் சாதாரண யுரோனியத்தின் அடக்க விலை தான் இதில் உபயோகப்படும் எரியையின் செலவும் ஆகிறது என்று சொல்லலாம். ஓர் இராத்தல் யுரேனியத்தின் விலே 35 டாலர்தான்; 20 இராத்தல் யுரேனியத்தைக் கொண்டு 52 மில்லியன்[2] கிலோவாட் அவர் மின்னாற்றலை உற்பத்தி செய்து கொள்ளலாம். இந்த ஆற்றல் சாதாரணமாக ஒரு பெரிய நகரில் ஓர் ஆண்டில் செலவாகும் ஆற்றலின் அளவாகும். எரியையின் விலையைப் பொறுத்த மட்டிலும் ஒரு கிலோவாட் அவருக்கு 0.000013 டாலர் அல்லது 0.0013 சென்டுகள்தாம் ஆகின்றது. ஆனால், சாதாரணமாக ஒரு கிலோவாட் அவர் மின்னாற்றலின் அடக்க விலை கிட்டத்தட்ட 0.01 டாலர் அல்லது 1 சென்டுதான் ஆகிறது. இந்தப் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு நோக்குமிடத்து, எரியையின் அடக்க விலை தள்ளுபடி செய்யவேண்டிய அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளது.


  1. 10 கருவித் தொகுதி - equipment.
  2. 11 மில்லியன் - பத்து இலட்சம்; ஆயிரமாயிரம்.