பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அணுவின் ஆக்கம்



ஒர் அணு நிலையத்தை நிறுவி நடத்துவதில் பல்வேறு உயர்ந்த விலையுள்ள சாதனங்கள் தேவையாகவுள்ளன ; நிலக்கரிக் கொதிகலங்களுக்கு இவை தேவையே இல்லை. ஓர் அணு உலை ஒராண்டுக் காலத்திற்குமேல் செயற்பட் பிறகு, பக்குவிடும் விளைவுப்பொருள்கள்[1] உலையின் உள்ளகத்தில் திரண்டு விடுவதால் அவை பொது இயல் மின்னிகள் சரியாகச் செயல் புரிவதற்குப் பெருந்தடையாக அமைந்து விடுகின்றன. ஆகவே, அப்பொருள்களை உடனுக்குடனே அகற்றவேண்டும். இதற்கு உள்ளகத்தையே[2]அகற்றி அதனைத் தூய்மையாக்க வேண்டும். இதிலுள்ள அசுத்தங்களை நீக்குதல் எளிதான செயலன்று ; அதை மிகச் சங்கடமானதும் அதிகச் செலவில் செய்யக் கூடியதுமான வேதியல் கிரியையினால் செய்விக்கவேண்டும். இதற்கு ஆகும் செலவு எரியையின் விலையைப் போலப் பத்து மடங்கு ஆகும் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட இது 0.013 சென்டு ஆகலாம். இதுவும் மிகச் சிறிய அளவே ; இது சாதாரணமாகவுள்ள மின்னாற்றல் விலையில் ஒரு சதவிகிதமே. உள்ளகத்தைத் துய்மை செய்யுங்கால் இன்னொரு முக்கிய செயலையும் மேற்கொள்ளலாம். அதுதான் புளுட்டோனியத்தைத் தூய்மைப்படுத்துதல் ஆகும். அணு உலை மிகத் திறனுள்ள பிரீடராக[3] இருந்தால், அதில் உண்டாகும் புளுட்டோனியத்தின் அளவு முதலில் நாம் மேற்கொண்ட யு-285ன் அளவைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும். மிகையாகவுள்ள புளுட்டோனியத்தை மட்டிலும் விற்று வேதியல் கிரியைக்கு ஆகும் செலவினை ஒரளவு ஈடுசெய்து விடலாம். எனவே, அபூர்வமாக நடத்தப்பெறும் அணு உலயில் ஏற்படும் நடைமுறைச் செலவும் மிக அதிகமாக இல்லை.

அணு நிலையத்தை அமைப்பதற்கு ஏற்படும் தொடக்கக் செலவு (முட்டு வழிச் செலவு)[4]தான் அதிகமாக இருக்-


  1. 12 விளைவுப்பொருள்கள்- by products.
  2. 13உள்ளகம்- core.
  3. 14 பிரீடர்– breeder"
  4. 15முட்டு வழி செலவு - cost of investment.