பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னாற்றல்

125


சௌகர்யமும் அதில் இருந்தது. அஃதாவது, அத்தகைய கப்பல்களில் அடிக்கடி எரியைகளை இடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை; அதன் அணு உலையிலுள்ள யுரேனிய உள்ளகம் பல ஆயிரக்கணக்கான மைல்கள் செல்வதற்கு வேண்டிய ஆற்றலைத் தருகின்றது. பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு அதில் எரியைகளைப் போட்ட வேண்டிய அவசியமே இல்லை. இந்தச் சௌகர்யத்தின் அடிப்படையைக் கொண்டே நெடுந்தூரம் பறக்கும் விமானங்களை நிறுவ முயற்சி செய்து வருகின்றனர். ஆயினும், மிகப் பளுவான அணு உலைகளை மேலே உயர்த்துவதிலுள்ள பிரச்சினைகளும், விமானத்திலுள்ள பிரயாணிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்கேற்ற பளுவான காப்பறைகளை அமைப்பதிலுள்ள பிரச்சினைகளும் இன்னும் தீர்ந்தபாடில்லை.