பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 30 அணுவின் ஆக்கம்

பீட்டா-கதிர்கள் : ஆல்பா-கதிர்கள் செல்லும் திசைக்கு எதிர்வாட்டமாகப் போகின்றவை பீட்டா-கதிர்களாகும். இவை எதிர் மின்னூட்டம் பெற்றுள்ளவை. இவை அதிகம் வளையாது மேல் நோக்கி ஓடுகின்றன. இவை விரைந் தோடும் எதிர் மின்னிகளைக் கொண்டவை. இவை ஏறக் குறைய ஒளியின் வேகம் போன்ற வேகமுடையவை.

காமா-கதிர்கள் : காமா-கதிர்கள் வலப்புறமோ இடப் புறமோ சாயாமல் நேரே செல்லுகின்றன. இவற்றில் மின்னிகள் இல்லே. இவை புதிர்க் கதிர்கள் போன்ற மின் காந்தக் கதிர் வீச்சுக்களைக் கொண்டவை. இவை குறைந்த அலே நீளங்களையுடையவை. இதனுல் அவை துணுக்கு களேப் போலவே செயல்புரிகின்றன. காமா-"துணுக்குகள்” ஒளியணுக்கள் என்றும் வழங்கப் பெறுகின்றன.

கதிர்களின் ஆற்றல் வேறுபாடு : மேற்கூறிய மூன்று கதிர் களும் தம் ஆற்றல்களில் வேறுபடுகின்றன. ஆல்பா-கதிர் களும் பீட்டா-கதிர்களும் ஊடுருவிச் செல்லும் தன்மையில் குறைந்தவை. அவை கால் அங்குல கனமுள்ள கண்ணுடி அல்லது உலோகம் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தக்கூடும். காமா - கதிர்களோ மிகவும் ஆற்றல் வாய்ந்தவை; ஒர் அங்குல கனமுள்ள உலோகத் தகட்டையும் எளிதில் ஊடுருவிச் செல்லக் கூடியவை.

இரசவாதம் : அணுவின் அமைப்பைக் காணும்பொழுது மின்னிகளின் ஏற்றக்குறைவே அணுக்களின் வேற்றுமைக்கு அடிப்படை என்றும், மின்னிகளின் எண்ணிக்கையை ஏற்றவும் குறைக்கவும் முடியுமானுல் ஒருவகை யணுவை வேறுெருவகை அனுவாக்கலாம் என்றும் கண்டோம். பண்டையோர் கண்ட இரசவாதமும்’ இந்த அடிப்படை யில் அமைந்திருக்கிறது என்பதையும் சுட்டி யுரைத்தோம். ஒர் ஆல்பா-துணுக்கு அல்லது எதிர்மின்னி ஒரு கருவிலி ருந்து அகற்றப் பெற்ருல் அந்தக் கருவின் மின்னூட்டம் மாறுகிறது ; இதல்ை அந்த அணுவின் புறவட்டங்களி லுள்ள எதிர் மின்னிகளின் எண்ணிக்கையிலும் மாற்றம்

  • @Já 6.1#51b - alchemy.