பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟密空 அணு வின் ஆக்கம்

SAASASAAAAASA SAASAASSAAAAAAMMAMAAAS

வானவைகளாக அமைவதில்லை. அதனுல்தான் 32 அணுக் களுக்குமேல் நேர் இயல் மின்னிகள் ஒருங்கு சேர்ந்து அணுக்கருவாக அமைவதில்லை. 92-க்குமேல் நேர் இயல் மின்னிகள் கூடத்தான் செய்கின்றன ; ஆளுல், அவை எளிதில் சிதைந்தழிகின்றன. எனவே, 92 வகைக்கு மேல் அனுவகைகள் தோன்ருத நுட்பமும் இப்பொழுது ஒரளவு புலனுகின்றது. இதனை ஒரு சிறிய எடுத்துக்காட்டினுல் இன்னும் தெளிவாக்கலாம்.

காய்கறிச் சந்தையில் வாணிகம் செய்யும் பெண்மணி பொருத்தி எலுமிச்சம் பழங்களேக் கொண்டு கோபுரம் கட்டு கிருள். குறைந்த எண் பழங்களைக் கொண்ட கோபுரம் நன்ருகவும் வலிவாகவும் அமைகிறது. இன்னும் அதிகமான பழங்களே அதன்மீது அடுக்கி அடுக்கி பெரியதொரு கோபுரம் அமைக்கிருள் அப் பெண்மணி. அவள் அடுக்க அடுக்கப் பழங்கள் சரிந்து விழுகின்றன. மனத்தளர்ச்சியின்றி பழங்களே மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போனுலும், 92. பழங்களுக்கு மேல் ஒன்று சேரவில்லை. மேலே கட்டும் பழங்கள் கட்டுத்தளர்ந்து பல பழங்கள் உருண்டோடு கின்றன. எஞ்சியிருக்கும் கோபுரம் வலிமையானதாக இருக் திறது. மேல் நிலை அணுக்கள் சிதையுங்கால் பெரும்பாலும் பரிதிய அணுக்களாகவே சிதைகின்றன. பரிதியக் கட்டு வலுவுள்ள கட்டாகையால் அவற்றைக் கொண்டே மேல்நிலை அணுக்கள் அமைந்தன போலத் தோன்றுகின்றது.

இன்னெரு உண்மை ஆவர்த்தன அட்டவணையை' உற்று நோக்கினுல் இன்னுெரு உண்மையும் புலளுகிறது. கனம் அதிகம் இல்லாத, இலேசான அணுக்களின் அணு - எடை பெரும்பாலும் அவற்றின் அணு எண்களுக்கு மடங்கிகளாக இருக்கின்றன. எடுத்துக் انسجالا لا يتي காட்டாக பரிதியத்தின் அணு - எண் 2: அணு - எடை 4. போரானின் அணு-எண் 5; அணு-எடை 10. கார்ப்பனின் அனு-எண் 6: அதன் அணு-எடை 12. ஆளுல், அதிகக் கனமுள்ள தனிமங்களின் அணு-எடை அணு-எண்களேவிட

it shaft #553r ot-i-Suðr - periodic table.