பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம்

இரட்டிப்பு மடங்கிற்கு மேலுள்ளன. எடுத்துக்காட்டாக ரேடியத்தின் அணு-எண் 88 ; அதன் அணு-எடை 228. புரேனியத்தின் அணு-எண் 92 ; அதன் அணு-எடை 238. இவற்றை மேலும் உற்றுநோக்க, இலேசான அணுக்கருக் களிலுள்ள நேர் இயல் மின்னிகளின் தொகையும் பொது இயல் மின்னிகளின் தொகையும் ஒன்ருக அல்லது கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கின்றன என்றும், அதிகமான அணுஎடை உள்ள தனிமங்களின் உட்கருவிலுள்ள பொது இயல் மின்னிகளின் தொகை நேர் இயல் மின்னிகளின் தொகையை விட மிகவும் அதிகமாய் இருக்கிறது என்றும் அறியக் கிடக் கின்றது.

ஹெய்ஸென்பர்க் கூறும் காரணம்: மேற்கண்ட ஒழுங்கான முறையை விளக்கினர் ஹெய்ஸென்பர்க்' என்ற அறிஞர். சில விஷயங்களைக் கற்பனை செய்து கொண்டே அதனே விளக்கினர். அவர் மேற்கொண்ட கற்பனை வெறும் மனே பாவனேயால் எழுந்தவையும் அன்று; காரணமற்றவையும் அன்று. அவை அறிவோடொத்தவை; நியாயமானவை. அவருடைய கற்பனையில் மூன்று அம்சங்கள் அடங்கி புள்ளன.

முதலாவது : பொது இயல் மின்னிகள் ஒன்றையொன்று அதிகமாகப் பாதிப்பதில்லை. அவற்றில் மின்னூட்டம் இல்லாததால் அவை ஒன்றையொன்று தள்ளுவதில்லை; அவை ஒன்றையொன்று கவர்கின்றன என்பதற்கும் யாதொரு சான்றும் இல்லை. பொது இயல் மின்னிகளே மட்டிலும் கொண்ட உட்கருவே இல்லை என்பது இதனைப் பின்னும் உறுதிப்படுத்துகிறது.

இரண்டாவது : நேர் இயல் மின்னிகள் ஒன்றையொன்று ஒதுக்கித் தள்ளுகின்றன. காரணம், அவை நேர் மின்னுரட் டத்தைக் கொண்டவை.

மூன்ருவது : நேர் இயல் மின்னிகள் ஒன்றையொன்று விலக்கித் தள்ளும் ஆற்றலைவிட நேர் இயல் மின்னிகளும்

14 ஹெய்லென்பர்க் - Heisenberg.