பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. கதிரியக்க ஓரிடத்தான்கள்


ரு சமயம் அமெரிக்க நாட்டில் வாஷிங்க்டன் என்ற நகரில் பத்திரிகையாளர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. மாநாட்டின் முக்கிய நோக்கம் பத்திரிகையாளர்கள் அணுவாற்றலின் உடன்விளைவுப் பொருள்களாகிய1 கதிரியக்க ஓரிடத்தான்களால் ஏற்பட்டிருக்கும் நல்விளைவுகளை யெல்லாம் அறியச் செய்வது. மாநாட்டிற்கு வந்திருந்த அன்பர்களில் ஒருவர் 'ஓரிடத்தான் என்றால் என்ன?’ என்ற வினாவை எழுப்பினார். அதன் பிறகு அதனையொட்டி நீண்டதோர் ஆராய்ச்சி நடைபெற்றது. அணுவாற்றலை நன்கறிந்த நிபுணர் ஒருவர் அவ் வினாவிற்கு நீண்டதோர் விளக்கம் தந்தார். அதில் அவர் அணு-எடை, அணு-எண் தனிமங்களின் வேதியற்பண்புகள், ஆவர்த்தன அட்டவணை, பொது இயல் மின்னிகள், நேர்இயல் மின்னிகள், அணுவின் உட்கருவின்2 அமைப்பு முதலிய பல்வேறு அரிய செய்திகளே விரிவாக எடுத்துரைத்தார். ஒரு கரும்பலகையைக்



1 உடன் விளைவுப் பொருள்-by~product.
2 அணுவின் உட்கருவின் அமைப்பு-composition of atomic nucleus