பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அணுவின் ஆக்கம்


இரட்டைப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுக் கூறலாம். ஒரே தாய், ஒரே தந்தை, ஒரே வீடு, ஒரே செல்வம் ஆகிய அம்சங்களில் இரட்டைப் பிள்ளைகள் ஒன்றுபோலிருப்பினும் அவர்களின் உடலமைப்பில் சிறிது மாறுபாடு இருந்தே தீரும். இத்தகைய இரட்டைப் பிள்ளைகளைப் போன்றவையே ஒரிடத்தான்களும். இதைவிட இன்னும் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்துகொள்ள வேண்டுமாயின், அதன் வரலாற்றை ஓரளவு சுருக்கமாக அறிந்துகொள்ளத்தான் வேண்டும்.

ஓரிடத்தான்-வரலாறு : ஆதியில் இயற்கையை ஆராயத் தொடங்கிய மனிதன் தன்னைச் சுற்றிலுமுள்ள பொருளே இனங்காணத் தலைப்பட்டான். முதன் முதலாக, தான் சுவாசித்த காற்றையும், பருகிய நீரையும், உண்ட தாவரங்களையும் பிராணிகளையும், எரித்த உரோமங்களையும் நிலக்கரியினையும், குடியிருப்பதற்கு வீடுகட்டிய கல்லையும் மண்ணையும், உணவு கெடாது பாதுகாப்பதற்குப் பயன்படுத்திய உப்பையும் இனங்கண்டான். காலப்போக்கில் இப்பொருள்களில் பெரும்பாலானவை வேறு சில அடிப்படையான பொருள்களானவை என்பது அவனுக்குப் புலனாயிற்று. எனவே, நீர் என்பது உண்மையில் நீரியம், உயிரியம் என்ற இரண்டு வாயுப் பொருள்களாலானது என்றும், உப்பு என்பது சோடியம் என்ற திடப் பொருளும் குளோரின் என்ற வாயுப் பொருளும் கலந்ததொரு பொருள் எனவும் அறிந்தான்; அவை ஒரு குறிப்பிட்ட அளவுகளில் சேர்ந்து புதிய பொருளாக மாறினமையால் முதற் பொருள்களின் தன்மையே அடியோடு மறைந்தது என்பதையும் கண்டான். இறுதியாக, இவ்வுலகில் 92 வகையான அடிப்படைப் பொருள்கள் இயற்கையில் அமைந்திருக்கின்றன என்றும், அவற்றிலிருந்து வேறு பொருள்களைப் பிரிக்கமுடியாதெனவும் அறிந்தான். இந்த அடிப்படைப் பொருள்கள், தூய்மையானவை. இவை தம்மொடு தாமும் பிறிதுமாகச் சேர்ந்து தான் இவ்வுலகிலுள்ள ஏனைய பொருள்கள் உண்டாகின்றன. இவற்றின் தனித் தன்மையைக் கண்ட மனிதன் அவற்றிகுத் 'தனிமங்கள்' என்ற பெயரையும் சூட்டினான். இந்த