பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

அணுவின் ஆக்கம்


பொருள்கள் கதிரியக்கப் பொருள்கள் என்று வழங்கப் பெறுகின்றன. இயற்கையிலேயே கதிரியக்கம் பெற்ற பொருள் எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரிந்த ரேடியம்10 என்பது.

இப்புவியின் அடிப்படையாக உள்ள 92 பொருள்களுக்கும் "தனிமங்கள்” என்று பெயர் சூட்டிய மனிதன் தனிப்பட்ட ஒவ்வொரு தனிமத்திலும் அடங்கியுள்ள வெவ்வேறு வகைப் பொருள்களுக்கும் புதியதொரு பெயர்சூட்ட விழைந்தான். அவன் தேர்ந்தெடுத்த பெயர் 'ஐசோடோப்பு'11 என்பது. ஐசோடோப் என்பது ஐசோ (iso), டோபாஸ் (tops) என்ற இரண்டு கிரேக்க சொற்களடங்கிய சொல்லாகும். iso என்பதற்கு 'ஒரே' (same) என்பது பொருள்; topos என்பது 'இடம்' (place) என்ற பொருளேத் தருவது. பிரெடெரிக் சாடி12 என்ற ஆங்கில அறிவியலறிஞர் தான் முதன் முதலாக இப்பெயரைச் சூட்டினார். தமிழில் நாம் இதனை 'ஒரிடத்தான்'13 என்று வழங்குவோமாக. சிலர் ஒன்றி வாழிகள் என்றும், சமனிகள் என்றும் வழங்குகின்றனர்.

ஓரிடத்தான் - இனங்காணல் : எனவே, ஓரிடத்தான் என்பது ஒரு வகை அணு; அது வேதியற் செயலில் இன்னொரு வகை அணுவைப் போலிருந்தாலும் எடையில் மட்டிலும் மாறுபடுகிறது என்பதை அறிகின்றோம். பொன்னின் ஓரிடத்தான் பொன்னே; ஆயின், ஏனைய பொன்னைப்போல் அது முற்றிலும் பொன்போல் இருப்பதில்லை. அங்ஙணமே சோடியத்தின் ஒரிடத்தானும் சோடியமே, ஆனால், அது முற்றிலும் ஏனைய சோடியத்தை ஒத்திருப்பதில்லை. ஓரிடத்தான் கதிரியக்கம் பெறாதிருந்தால் அதனை அப்பொருளின் வேறு வகை அணுக்களிலிருந்து மிகச் சிக்கலான ஆய்வகக் கருவித் தொகுதியினால்தான்14 வேறுபடுத்தி அறிய முடி-


9கதிரியக்கப் பெற்ற - radioactive. 10ரேடியம் - radium. 11ஐசோடோப்- isotope. 12பிரெடெரிக் சாடி-Frederick Soddy. 13ஓரிடத்தான்-isotope. 14ஆய்வகக் கருவித் தொகுதி-laboratory equipment.