பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அணுவின் ஆக்கம்


ஒரு சில எதிர்மின்னிகள்தாம் அவற்றில் பங்கு கொள்ளுகின்றன என்பதையும் நாம் அறிவோம். அணுவின் விட்டத்தை நோக்க, உட்கரு மிகவும் சிறியது ; எதிர்மின்னிகள் உட்கருவிற்கு அப்பால் மிகத் தள்ளியிருப்பதால் அவை பங்கு கொள்ளும் வேதியற்கிரியை உட்கருவினைச் சிறிதும் பாதிப்பு தில்லை. அணு, மின்சார - நடுநிலை வகிப்பதால் அதில் கோள் நிலையில் இயங்கும் எதிர் மின்னிகளின் எண்ணிக்கை அணுக்கருவினுள்ளிருக்கும் நேர்இயல் மின்னிகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கவேண்டும். இந்த எண்தான் அணு-எண் என்பது. ஒரேஅணு எண்ணைக் கொண்ட அணுக்கள் யாவும் ஒத்த வேதியற் பண்புகளைப் பெற்றிருக்கும். பொது இயல் மின்னிகள் நேர் இயல் மின்னிகளுடன் சேர்ந்து புதிய விதமான அணுக்கருக்களே உண்டாக்கக் கூடும் ; இதனால் பல்வேறு எடைகளைக் கொண்ட அணுக்கருக்களே அடைகின்றோம். அவற்றிலுள்ள நேர் இயல் மின்னிகளின் எண்ணிக்கை மாறாதிருப்பதால், அணுக்களின் வேதியற் பண்பும் மாறாதிருக்கின்றது. எடுத்துக்காட்டாக (படம்-20 பார்க்க) கார்பனின் அணு எண் 6; ஆனால், கார்பனின் அணுக்கரு ஐந்து வடிவங்களில் அமைகின்றது :

கார்பன் - 10 ... 6 நேர் இயல் மின்னிகள் +4 பொது
                          இயல் மின்னிகள்.

கார்பன் - 11 ... 6 நேர் இயல் மின்னிகள் +5 பொது
                          இயல் மின்னிகள்.

கார்பன் - 12 ... 6 நேர் இயல் மின்னிகள் +6 பொது
                          இயல் மின்னிகள்.

கார்பன் - 13 ... 6 நேர் இயல் மின்னிகள் +7 பொது
                          இயல் மின்னிகள்.

கார்பன் - 14 ... 6 நேர் இயல் மின்னிகள் + 8 பொது
                          இயல் மின்னிகள்.

இதிலிருந்து ஒரே தனிமம் பல்வேறு எடைகளைப் பெற்று அத்தனிமத்தின் ஓரிடத்தான்களாகின்றன என்பதை அறிகின்றோம். நேர் இயல் மின்னியின் எடையும் பொது இயல்