பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

அணுவின் ஆக்கம்


அவருடைய துணைவியார் ஐரென் குயூரி23 அம்மையாரும் செயற்கை முறையில் கதிரியக்கமுள்ள ஓரிடத்தான்களை உண்டாக்கும் முறையினைக் கண்டறிந்த பிறகு இவ்வகை ஓரிடத்தான்கள் எண்ணிக்கையில் உயர்ந்தன. அண்மையில் கண்டறியப் பெற்ற அணு - உலைகளின் மூலம் இவற்றின் உற்பத்தி பின்னும் பெருகிவிட்டது. உலகின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள பெளதிக அறிஞர்கள்24 ஜோலியட் தம்பதிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஒரிடத்தான்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிற தனிமங்களைக்கொண்டும் பல சோதனைகள்25 நடத்தினர். மிக விரைவில் பல டஜன் ஓரிடத்தான்களைக் கண்டறிந்து விட்டனர்; அவற்றின் தன்மைகளும் விரைவில் புலனாயின. இன்று வரையில் அவர்கள் தாம் அறிந்த 100 தனிமங்களின் 1300 ஓரிடத்தான்களைக் கண்டறிந்துள்ளனர். அவற்றுள், 800 கதிரியக்கமுடையவை. ஆகவே, அவை செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான்கள் என்று வழங்கப்பெறுகின்றன. செயற்கை இரசவாதம்26 சித்தியாய்விட்டது. ஆவர்த்தன அட்டவணை என்ற மாளிகையின் சிகரத்தில் வீற்றிருந்த யுரேனியத்தைவிட அதிகமான அணு - எண் கொண்ட தனிமம் இருக்க முடியாதென உறுதியாகக் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துப் போயிற்று. இப்பொழுது அந்த அட்டவணையில் சில புதிய தனிமங்கள் இடம் பெற்றுவிட்டன. அவை யுரேனியத்தை அதன் உச்சநிலையிலிருந்து தள்ளி அதைக் கடந்து அதற்கப்பாலுள்ள இடங்களில் அமர்ந்திருக்கின்றன. அவை போலிகளும் போக்கிரிகளும் உயர்ந்த பீடங்களைப் பெறும் இவ்வுலகியலைக் காட்டி நிற்கின்றனவன்றோ ? அணு ஆராய்ச்சி என்ற நீண்டதோர் பாதையில் செயற்கை முறை ஓரிடத்தான்களின் உற்பத்தி பெரிய மைல் கற்களில் ஒன்று என்பதற்குத் தடையொன்றும் இல்லை. ஆயினும், அதை விட முக்கியமானது மற்றொன்று உள்ளது. இந்த ஓரிடத்தான்களை அறிவியலறிஞர்கள் மருத்துவ இயல், பயிர்த்-


23ஐரென் குயூரி- Irene Curie. 24பெளதிக அறிஞர்கள்-physicists. 25 சோதனைகள்-experiments. 26செயற்கை இரசவாதம்-artificial transmutation.