பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்க ஓரிடத்தான்கள்

147


போர்க்காலத்திலிருந்த இரகசியக் கட்டுப்பாடுகள்46 தளர்வுற்றதும் அவர்கள் அணு உலையில் உண்டாக்கப்பெற்ற கதிரியக்க ஒரிடத்தான்களை ஆராய்ச்சி செய்யும் பொருட்டு தனிப்பட்டோரின் நிலையங்களுக்கு வினியோகம் செய்தனர். இத்திட்டத்தை அணுவாற்றல் குழுவே மேற்கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கதிரியக்க ஓரிடத்தான்கள் கிடைத்ததும் அதை இன்னும் விரிவடையச் செய்தது. 1948க்குப் பிறகு இக்குழு அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதிலும் நிறுவப்பெற்றிருக்கும் 1000க்கு மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்களுக்கு 35,000க்கு மேற்பட்ட கப்பல் பார ஒரிடத்தான்களை அனுப்பியிருக்கின்றது. அது போலவே, 31 வேறு நாடுகளிலுள்ள கிட்டத்தட்ட 250 ஆராய்ச்சி நிலையங்கட்கும் 2000க்கு மேற்பட்ட கப்பல் பாரங்கள்47 அனுப்பப் பெற்றுள்ளன. இங்கிலாந்து, பிரான்சு, கனடா, இரஷ்யா ஆகிய நாடுகளிலுள்ள அரசினரின் அணு உலைகள் இத்துறையில் பேரளவு பணியாற்றியிருக்கின்றன. 1954ஆம் யாண்டின் நடுப்பகுதி வரையிலும் அமெரிக்காவிலிருந்து 43 நாடுகள் இவ்வோரிடத்தான்களைப் பெற்றுள்ளன என்பதையும் அறிகின்றோம்.

அமெரிக்காவில் பல இடங்களில் கதிரியக்க ஓரிடத்தான்கள் உற்பத்தி செய்யப் பெறினும், அதன் பெரிய மூலம் டென்னெஸ்ஸியைச்48 சேர்ந்த ஒக் ரிட்ஜ் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கடந்த இரண்டாம் உலகப் பெரும் போர் நடைபெற்ற காலத்தில் புளுட்டோனியம் உற்பத்திற்காக நிறுவப்பெற்ற சிறிய அணு உலையில்தான் இவ்வோரிடத்தான்கள் உண்டாக்கப்பெறுகின்றன. அந்த உலை காற்றினால் குளிரடையச் செய்யப்பெற்று பென்சில் கரியாலான தணிப்பானைப் பெற்றிருக்கின்றது. இங்கு உற்பத்தியாகும் ஓரிடத்தான்கள் அடக்க விலைக்கே தரப்பெறுகின்றன. புற்று நோய் ஆராய்ச்சி, நோய்களை அறிதல் (therapy) ஆகியவற்றிற்குப் பயன்படும் ஓரிடத்தான்களை மட்டிலும் அடக்க


46இரகசியக் கட்டுப்பாடுகள்-secrecy restrictions. 47கப்பல் பாரம்-shipment 48டென்னெஸ்ஸி-Tennessee