பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அணுவின் ஆக்கம்


பொன் இதழ்கள் பழைய நிலையை அடையும். இவ்வாறு இதழ்கள் விரிந்து சுருங்குவதைக் குறைந்த ஆற்றலையுடைய உருப்பெருக்கியால்15 அறிந்துகொள்ளலாம். அசைவின் வேகமே அயனியாதலின் தீவிரத்தைக் காட்டும்.

கைகர்-முல்லர் எண்-கருவி: கதிரியக்கமுள்ள பொருள்கள் வீசும் எதிர் மின்னிகள், ஆல்பா-துணுக்குகள் போன்ற மின்னூட்டம்பெற்ற துணுக்குகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கணக்கிடுவதற்கு அமைக்கப்பெற்ற கருவி இது. இதை இயற்றியவர்கள் செருமானிய நாட்டு கைகர், முல்லர் என்ற இரு அறிவியலறிஞர்கள். அவர்கள் பெயரைக் கொண்டே இது கைகர்-முல்லர் எண்-கருவி16 என்று வழங்கப்பெறுகின்றது. கைகர் எண்-கருவி என்றும் இதனை வழங்குவதுண்டு. அணுக்கள் வீசும் கதிர்வீச்சினைத் துப்பறிந்து காண்பதற்கு அமைந்த கருவிகளெல்லாவற்றிலும் மிகப் பெருவழக்காக இருப்பது இக்கருவிதான். இக்கருவியின்

கைகர் முல்லர் எண்-கருவி


படம் 25 அ

குடும்பத்தைச்சார்ந்த பல கருவிகள் உள்ளன ; ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் துப்பறியும் பணியைப் புரிந்துவருகின்றது. எடுத்துக்காட்டாக, காமா-கதிர்களை மட்டிலும் கண்டறியும் கருவிகளும், ஆல்பா, அல்லது பீட்டா - துணுக்குகளைமட்டிலும் துப்பறிந்து காணும் கருவிகளும், பொது இயல்


15உருப்பெருக்கி-microscope.16 கைகர்-முல்லர் எண்-கருவி-Geiger counter (or G. M. counter)