பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

164


மின்னிகளைமட்டிலும் உளவு கண்டறியும் கருவிகளும் உள்ளன. எல்லாச் சாதனங்களின் அமைப்பும் ஒரே மாதிரி தான். அவையாவும் அடிப்படையில் அயனியாதல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இக்கருவியின் அமைப்பு இதுதான்: உலோகத்தாலான ஒர் உருட்டுக்குழல்; அதன் நடுவே டங்க்ஸ்டன் இழையொன்று17 அமைக்கப்பெற்றிருக்கின்றது. (படம்-25 அ, ஆ, இ). இழையில் சாதாரணமாக நேர் மின்னூட்டத்தையும், உருட்டுக் குழலில் எதிர் மின்னூட்டத்தையும் பாயச் செய்வது வழக்கம். குழல் ஒரு வாயுவைக்கொண்டு நிரப்பப்பெற்றிருக்கும். சாதாரணமாக ஆர்கான் என்ற சோம்பேறி வாயுவால்தான் அது நிரப்பப்பெறும். கருவி பயன்படுவதற்கேற்றவாறு அதில் வெவ்வேறு வாயுக்களைப் பயன்படுத்துவர். பொது இயல் மின்னிக் கதிர்வீச்சினை அளக்கவேண்டுமானால், அந்தக் குழல் போரான் டிரை புளோரைடு{18 என்ற வாயுவால் நிரப்பப்பெறும். உலோகக் குழாய்க்கும் அதன் ஊடே செல்லும் டங்க்ஸ்டன் இழைக்கும் இடையேயுள்ள மின்-அழுத்தத்தை மிகவும் ஜாக்கிரதையாகச் சரிப்படுத்திக் கொண்டுவந்து மின்பாய்ச்சல் புழையிலிருந்து இழைக்கு ஏற்படத் தயாராக இருக்கும் நிலையில் நிறுத்தி வைப்பர்.

குழலிலுள்ள வாயுவின் ஊடாக கதிரியக்க விளைவாக ஏற்படும் மின் துணுக்குகள் போகுமானால், உடனே கம்பிக்கும் குழலுக்கும் இடையே மின்பாய்ச்சல் நிகழும். வெடிக் குழையில் திரி வைத்தால் வெடிப்பதுபோல ஒலித்துக் கொண்டு இதில் மின்சாரம் பாயும். ஒவ்வொரு துணுக்கு போகும்பொழுதும் இவ்வொலி எழும். முதன்முதலில் அமைக்கப்பெற்ற கருவியில் துணுக்கு ஒடுவதைச் சுட்டிக் காட்டும்பொருட்டு ஒரு முள்ளே வைத்திருந்தனர். மின்னோட்டம் நிகழுங்கால் அந்த முள் பட்டென்று ஒருபுறம் தெறித்து விலகும். துணுக்கின் ஒட்டத்தை முள் தெறிப்பு


17இழை-filament.
18போரான் டிரை புளோரைடு-boron trifluoride.