பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அணுவின் ஆக்கம்


களையும்20 மிகப் பெரிய வேகங் கொண்டு தாக்கினால் மட்டுமே அணுக்கரு சிதையும்.

அணுரவைகளை வேகமாக எய்வதற்கு இன்று அறிவியலறிஞர்கள் பிரத்தியேகமான கருவிகளை அமைத்திருக்கின்றனர். இவற்றைப் பொதுவாக 'துணுக்கு விசை முடுக்கிகள்'21 என்று வழங்குகின்றனர். துணுக்கு விசை முடுக்கிகள்தாம் அணுவின் அரணைத் தகர்த்துக்கொண்டு அணுக்கருவினையடைந்து அதன் மர்மத்தை எல்லாம் அறிவதற்கும் 'அணுவியல்' அல்லது 'உட்கருவியல்' என்னும் புதிய அறிவியல் துறைக்கு அடிப்படை போடவும் துணையாக இருக்கின்றன. துணுக்கு விசை முடுக்கிகள்தாம் முதன் முதலில் மிகச் சிறிய அளவுகளில் புதிய தனிமங்களையும் புதிய ஓரிடத்தான்களையும் உற்பத்தி செய்தன ; உலோகங்களைப்பற்றிய சோதனைகளில் புதிய எடுகோள்களே22 நிலைநிறுத்தின. எடுத்துக்காட்டாக, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நிறுவப்பெற்ற அறுபது அங்குல சுழலினியில் தான் முதன்முதலாக புளுட்டோனியம் உற்பத்தியாயிற்று. துணுக்கு விசை முடுக்கியின் தகர்ப்பினால்தான் இதுகாறும் அண்டக்கதிர்களின் செயலால்மட்டிலும் வெளியிடப்பெற்ற எதிர் இயல் மின்னி என்ற புதியவகைத் துணுக்கு வெளிப்பட்டது. இன்று ஆற்றலைச் சடமாகவும், சடத்தை ஆற்றலாகவும் மாற்றலாம் என்ற அறிவியல் கொள்கை சோதிடம் கூறுகிறது. மிகப் பெரிதாக அமைக்கப் பெற்றுவரும் துணுக்கு விசை முடுக்கியினைக்கொண்டு நேர் இயல் மின்னிகளைப் படைக்கலாம் என்று அறிவியலறிஞர்கள் நம்புகின்றனர்.

அணுத்துணுக்குகளை விசையாகச் சுழற்றும் இக்கருவிகள்யாவும் திறனில் வேறுபடினும், ஒரே அடிப்படை விதிகளினால்தான் இயங்குகின்றன. எல்லாக் கருவிகளிலும் காந்த விசைகள்23 அல்லது மின்விசைகள் அல்லது


20அணு ரவை-atomic bullet.21துணுக்கு விசை முடுக்கிகள்-particle accelerators.22எடுகோள்-data.23விசைகள் - forces.