பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

169



கீழே ஒர் இயக்கி இருக்கிறது. அது சுற்றுகிறது. அதற்கு நேராக இடப்பக்கம் ஒரு சக்கரம் இருக்கிறது. இரண்டையும் வட்டமான ஒரு பட்டை பெல்டு இணைக்கிறது. இயக்கி சுற்றும்பொழுது இடப்புறச் சக்கரமும் சுற்றுகிறது. இடப்புறச் சக்கரம் சுற்றும்பொழுது அதன் மேலுள்ள சக்கரமும் சுற்றும். கீழிருக்கும் சக்கரத்தை ஒட்டிப் பட்டை மேல் உராயும்படியாக நுண்ணிய ஊசிகள் இருக்கின்றன. உராயும்பொழுது எழுகின்ற மின்சாரத்தை இவை பட்டை மேல் தெளிக்கின்றன. இந்தப் பட்டை கீழிலிருந்து மேலே சென்றதும் அங்கேயுள்ள வேறு ஊசிகள் இந்த மின்சாரத்தை வாங்கிக் கொள்கின்றன. இந்த ஊசிகளுடன் பொருந்தியிருக்கும் கம்பி மின்சாரத்தை வாங்கி கோளத்தினுள் திரளும்படி செய்கின்றது.

இங்ஙணம் சிறிது சிறிதாகக் கோளத்தில் ஏறிவரும் மின்சாரத்தின் அழுத்தம் இறுதியில் அதிகமாகிறது. அது சில அடிகளுக்கு அப்பால் இருக்கும் ஒர் இலக்கினை நோக்கிப் பாயும் ஆற்றல் உடையதாகவும் இருக்கின்றது. அழுத்தம் மிக்கவாயுவை அடைத்த பெரிய அறைபோன்ற அமைப்பில் இது முழுதும் பொருத்தப்பட்டிருக்குமானால், இதன் மின் அழுத்தம் 5,000,000 எலக்ட்ரான் வோல்ட்டு வரையில் கூட உயரும் என்று வான்-டி-கிராப் கண்டார். இந்த அணு பீரங்கியால் எய்யப்பெறும் அணு-ரவைகள் சில ஆயிரமாயிரம் எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் உள்ளவைகளாக இருக்கும்.

இ. ஒ. லாரென்ஸ் சுழலினி : வான்-டி-கிராபின் மின்னாக்கி ஒரு மில்லியன் எலக்ட்ரான் வோல்ட்டுவரை எதிர்மின்னியின் ஆற்றலை உயர்த்திக் காட்டியது. ஆனால், லாரென்ஸ் ஓர் அற்புதக் கருவியை அமைக்கிறார். அதுதான் சுழலினி என்பது. நீரியக் கருவோ இருநியோ28 கற்றையாகப் பேரருவிபோல ஒடிக் கருவினைத் தாக்கவேண்டும் என்று லாரென்ஸ் விரும்பினர். அணுவின் பொருண்மை மிகுதியாக மிகுதியாகக் கருவின் எதிர்ப்பும் மிகுதியாகின்றது. நீரியக்-


28இருநி- deuteron.