பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அணுவின் ஆக்கம்


துணுக்குகள் வட்டமாகச் சுழன்றோடும். அப்படி ஒடுங்கால் அவற்றின் வேகம் அதிகப்படும் ; அதனால் அவற்றின் ஆற்றலும் மிகும். துணுக்குகளின் வேகம் மிகமிக அவை சுழலும் வட்டத்தின் சுற்றளவும் அதிகமாகின்றது ; அஃதாவது, அவை பெரிய வட்டமாக இட்டு ஓடுகின்றன. சிறிய வட்டமானாலும் பெரிய வட்டமானாலும் அவை வட்டமாய் ஒடும் காலம் ஒன்றாகவே இருக்கும்.

இருதிசை மின்சார அதிக - அதிர்வு மின்னாக்கியுடன் பிணைக்கப்பெற்ற ஒவ்வொரு “டீயும்" ஒரு கணத்தில் பல தடவை நேர் மின்சாரத்தையும் எதிர் மின்சாரத்தையும் மாறி மாறிப் பெறுகின்றன. இரண்டு டீக்களும் எப்பொழுதும் ஒன்றுக்கொன்று எதிரான மின்சாரங்களேயே கொண்டிருக்கும். இரண்டு டீக்களின் நடுவில் இயற்றப்பெறும் நேர் இயல் மின்னிகள், டியூட்டிரான்கள், ஆல்பா-துணுக்குகள் ஆகியவை (எவையாயினும்) நேர் மின்சாரம் உடையவைகளாக இருக்கும். ஆகவே, அவை அந்தக் கணத்தில் எந்த 'டியில்' எதிர் மின்சார ஏற்றம் இருக்கின்றதோ அதனால் கவரப்பெறும். வெற்றிடமாயுள்ள அந்தப் பெட்டி மிகவும் ஆற்றல் வாய்ந்த இரண்டு மின்சார காந்தங்களின் இடையே இருப்பதால், அங்குள்ள காந்தப்புலன் மின் துணுக்குகளை 'டீயின்' உட்புறத்தில் வளைந்தோடி அரைவட்டம் இடச் செய்கின்றது. இந் நிகழ்ச்சி இக்கருவியின் நடு மையத்தில் நடைபெறுவது. இப்படி ஒடும் மின் துணுக்குகள் இரண்டு டிக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளிக்கு வந்தவுடன் இருதிசை மின்னாக்கப் பொறியால் டீக்களிலுள்ள மின்சாரத்தின் திசை மாற்றப்பெறுகின்றது. ஆதலால், இப்பொழுது மற்றோரு டி அதற்கு எதிரிடையான மின்சாரத்தைப் பெற்று அவற்றைக் கவர்கின்றது. ஆகவே, அவற்றின் வேகம் மிகுதிக்பட்டு அவை அந்த டீயின் உள்ளே சென்று அங்கும் அரை வட்டமாக ஓடுகின்றன. மீண்டும் அவை இரண்டு டீக்களுக்கும் இடையேயுள்ள காலி இடத்திற்கு வருகின்றன. அப்பொழுது மீண்டும் மின்சாரம் திசை மாறுகின்றது. ஆதலால், அவை இன்னும் வேகமாக இழுக்கப் பெறுகின்றன. இவ்வாறு அவை டீயில் ஒடுங்கால் வேகமாக