பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

அணுவின் ஆக்கம்


அடிக்கடி சிறு சிறு வெளியீடுகளின் மூலம் அறிவித்து வருகின்றது. அவ்வெளியீடுகள் யாவும் ஆங்கிலத்திலிருப்பதால் ஆங்கிலம் பயிலாத தமிழ் மக்கள் அவற்றினைப் படித்து அறிந்துகொள்ளும் வாய்ப்புக்களே இல்லை. தவிரவும், அணுவாற்றலின் பயனப்பற்றிய பல அரிய அறிவியல் நூல்களும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. அவற்றிலுள்ள கருத்துக்களையெல்லாம் தமிழ் மக்கள் ஓரளவு அறிந்து கொள்வது நவீன வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.

கதிர்வீச்சு :6 அணுவாற்றலைப்பற்றிப் படிக்கும் நாம் உயர்வாற்றல் கதிர்வீச்சினைப்7 பற்றிதான் நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். ஒரு மின்சார அடுப்பிலிருந்து வெப்பக் கதிர்கள் வீசப்பெறுகின்றன ; ஒரு மின்சாரக் குமிழிலிருந்து8 ஒளிக்கதிர்கள் வீசப்பெறுகின்றன. இவையெல்லாம் வலிவற்ற கதிர்வீச்சுக்கள். உயர்வாற்றல் கதிர்வீச்சு என்பது அணுவாற்றலால் விளைவது; கதிரியக்கக் கிளர்ச்சியாலும்9 இது விளையும்.

அணுவின் அமைப்பைப்பற்றி ஏற்கெனவே அறிந்தவற்றை இவ்விடத்தில் நினைவு கூர்தல்வேண்டும். நமது உடல், மேசை, நாற்காலி, மின்சாரம் செல்லும் கம்பி போன்ற எல்லாப்பொருள்களும் சில அடிப்படைப் பொருள்களாலானவை என்பது நமக்குத் தெரியும். இந்த அடிப்படைப் பொருள்களைத்தான் தனிமங்கள் என்று வழங்குகின்றோம். அயோடின் என்பது ஒரு தனிமம் ; தாமிரமும்10 ஒரு தனிமந்தான், நீரில், உயிரியம், நீரியம் என்ற இரண்டு தனிமங்கள் உள்ளன. அதுபோலவே, நாம் உண்ணும் சோற்றுப்பும் சோடியம், குளோரின் என்ற இரண்டு தனிமங்களாலானது. இத் தனிமங்கள் யாவும் அணுக்களாலானவை. ஒவ்வொரு அணுவிலும் பல பகுதிகள் உள்ளன. அணுவின் நடுவில் இருப்பது உட்கரு ; அதனைச் சுற்றிப் பல வட்டமான கூடுகளில் எதிர் மின்னிகள் சுற்றி வருகின்றன. அணுக் கரு


6கதிர்வீச்சு- radiation. 7உயர்வாற்றல் கதிர் வீச்சு - high energy radiation.8குமிழ்-bulb. 9கிளர்ச்சி-radioactivity. 10தாமிரம்-copper.