பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

183


அணு என வழங்கினோம் அல்லவா? சமனிலையினின்றும் பிறழ்ந்து மின்னூட்டம் பெற்றுச்சென்று அலைகின்ற அணு தான் அயனி என்பது செல்லி என்றும் இதனை வழங்குவர். அயனியின் ஆக்கத்தைக் கொண்டே கதிர்வீச்சு இயக்கத்தை அளந்தறியலாம்; அதனைக் கொண்டே ஆல்பா - கதிர், பீட்டா - கதிர், காமா - கதிர், புதிர்க் கதிர் முதலியவற்றின் இருப்பினைத் துப்பறியவும் செய்யலாம். அது கிடக்க.

சாதாரணமாக ஒரு நேர் மின்னூட்டம் பெற்ற அயனி ஒர் எதிர் மின்னூட்டம் பெற்ற அயனியுடன் ஒன்றுசேர்ந்து மின்சார சமனிலையுள்ள ஒரு புதிய அணுத்திரளையினை உண்டாக்குவதுதான் இயல்பு. உயிரணுவில், சிதைவுற்ற அணுத்திரளையினின்று அயனிகளாகப் பிரிந்த பகுதிகள் மிகச் சிறிய காலஅளவில் மீண்டும் ஒன்றும் பட்சத்தில், அந்த அணுவிற்கு நிலையான கேடு ஒன்றும் நிகழ்வதில்லை. இவ்வாறு நிகழ்வதற்குரிய வாய்ப்புக்கள் அரியவை ; இல்லையென்றுகூடச் சொல்லி விடலாம். காரணம், தீவிரமான அயனியாக்கும் கதிர்வீச்சால் பல்வேறுபட்ட அணுத் திரளைகள் சிதைவுறுகின்றன. எண்ணற்ற இந்த அயனிக் கூட்டங்கள் பல்வேறு குழப்பமான முறைகளில் மீண்டும் ஒன்று சேர்கின்றன. இச்சேர்க்கை ஒர் ஒழுங்குமுறையில் மிக நுட்பமாக அமைந்த இழையத்தை முழுதும் குலைவுறச் செய்வதுடன், புதிய சேர்க்கைப் பொருள்களையும் உண்டாக்கி விடுகின்றன. இச் சேர்க்கைப் பொருள்கள் நச்சுத் தன்மை பொருந்தியவை; நன்னிலையிலுள்ள பிற இழையங்களையும் நஞ்சூட்டிக் கேடுறச் செய்கின்றன. அன்றியும், கதிரியக்கத் துணுக்குகள் மோதுதலால் புதிய வேகம்பெறும் அயனிகள் வேறு இழையங்களைத் துளைத்துச் செல்லுகின்றன. இதனால் அயனியாக்கும் கதிர் வீச்சால் நிகழும் விளைவுபோன்றதோர் விளைவினையும் உண்டாக்கிவிடுகின்றன. இன்றைய நிலையில் மேற்குறிப்பிட்டவைகளைத் தவிர கதிர் வீச்சினால் உயிர் அணு, உயிரணுக்கள், இழையங்கள் ஆகியவற்றின்