பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓋器峰 அணுவின் ஆக்கம்

நடைபெறுகின்றது என்பதை ஒன்றும் அறியக் கூடவில்லை. ஆனுல், செயல்முறையில் கையாளக்கூடிய ஏராளமான வேலே முற்றுரு முறையில், செய்து-பிசகி-அறிதல் அடிப் படையில், தடைபெற்றிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, அறிவியலறிஞர்கள் எலும்பு-மச்சை யனுக்களும் வேகமாக வளரும் பிற இழையங்களும் மூளை உயிரணுக்களேவிட மிகவும் வேகமாகப் பாதிக்கப்பெறுகின்றன என்றும், இவ்வாறே கதிர்வீச்சினை எதிர்த்து நிற்கும் ஆற்றலில் இழையத்திற்கு இழையம் அதிக வேறுபாடு உண்டு என்றும் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயுள்ள அணுக்கள் சாதாரண நிலையிலுள்ள இழையத்தைவிட கதிர்வீச்சு இயக் கத்துக்கு உணர்ச்சியுள்ளவை ; இந்த அறிவைக் கொண்டு தான் ரேடிய மருத்துவர்கள் புற்றுநோய் சிகிச்சையில் புதிர்க்கதிரையும் ரேடியத்தையும் பயன்படுத்துகின்றனர். இத்துறையில் ஏராளமான பணத்தைச் செலவிட்டு அமெரிக்க அணுவாற்றல் குழு தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றது . ஆயிரக்கணக்கான அறிவியலறிஞர்கள் இத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

உயிருள்ள பொருள்களில் ஆராய்ச்சி : உயி ரு ள் ள பொருள்கள் யாவும் அனுத்திரளைகளாலானவை என்றும், கதிர்வீச்சால் அணுத்திரளைகள் பாதிக்கப் பெறுகின்றன என்பதையும் மேல்ே கண்டோம். கதிர்வீச்சு பல்வேறு விதமாகப் பாதிக்கின்றது ; பல்வேறு அளவிலும் இதன் தீவிரம் காணப்பெறுகின்றது. தோலில் அழற்சி ஏற்படுதல் போன்ற ஒருசில ஊறுபாடுகள் எளிதாகத் தோன்றக்கூடும். ஆயினும், அடிக்கடி நேரிடும் இவ்வழற்சி புற்றுநோயில் கொண்டுவந்து விடவும் கூடும். இது எவ்வாறு நிகழ்கிறது என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. கதிர் வீச்சால் நேரிடும் வேறு கேடு இன்னும் மிகவும் நுட்பமாக *ளது. காமா-கதிர்களோ பொது இயல் மின்னிகளோ _மாக உடலைத் தாக்கினுலும், தற்செயலாக கதிரியக் *களின் துணுக்குகள் உடலினுள் ப்ோக நேரிட்

empirical, “ L1Sif - mystery.