பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

அணுவின் ஆக்கம்

பெறும் புகைப்பட பிலிமைக் [1] கொண்டும் கதிரியக்கத்தின் இருப்பிடத்தை அறிய முடியும். உடலிலுள்ள வேதியற் பொருள்களின் நடத்தையைக்[2] கண்ணுறுவதற்கு மேற். கொள்ளப்பெறும் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் இந்த ஒரே கருவிதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உயிரணுக்கள் : உயிர்ப் பிராணிகளின் மீது படும் அயனியாக்கும் கதிர்வீச்சின் விளைவுகளைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டுமானால், அது உடலிலுள்ள வேதியற் பொருள்களை சிதறடிக்கும் விளைவுகளை-அஃதாவது அணுக்களையும் அணுத்திரளேகளையும் நேர்மின்னூட்ட அயனிகளாகவும் எதிர்மின்னுரட்ட அயனிகளாகவும் ஆக்குதல்-புரிந்து கொள்வதுடன், கேடுண்டாகும் உயிரணுவில் அயனியால் உண்டாகும் விளைவு என்ன என்பதையும் முதலாவதாக அறியவேண்டும். ஒற்றையணு நுண்ணுலத்திலிருந்து[3] மானிடன் வரையிலும் உள்ள உடல்கள் பல இலட்சக்கணக்கான உயிரணு[4]க்களால் அமைந்தவை.

இவ்வுலகில் நிரம்பியுள்ள தாவரங்களும் பிராணிகளும் புரியும் பல்வேறுபட்ட செயல்களை முற்றுவிப்பதற்கு உயிரணுக்கள் அளவிலும், வடிவத்திலும் நடத்தையிலும் பல்வேறு பட்டவைகளாக உள்ளன. எனினும், எல்லா உயிரணுக்களும் ஒரேவித திட்டத்தில்தான் அமைந்துள்ளன. ஒரேவித விதிகளின் அடிப்படையிலும் முறையிலும் தான் காளானின்[5] நுண்ணுடலியும்[6] பெட்டைக் கோழியின் முட்டையும் தம் இனத்தைப் பெருக்கி வருகின்றன. மனிதனுடைய உடலினுள்ளிருக்கும் விரைவாகப் பெருக்க மடைந்து வரும் குருதியணுக்களும், நரம்புகளின் வழியே. செய்திகளை யனுப்பும் நீண்ட ஆயுளேயுடைய நூல்போன்ற தரம்பு அணுக்களும் புறத்தோற்றத்தில் ஒன்றுபோல் இல்லே. அவை இரண்டுமே இயந்திர ஆற்றலைத் தரும்


  1. 37.பிலிம் - film.
  2. 38.நடத்தை - behaviour.
  3. 39.ஒற்றை நுண்ணுலம் - single cell bacillus
  4. 40.உயிரணு - cell.
  5. 41.காளான்- fungus.
  6. 42.நுண்ணுடலி- spore.