பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

அணுவின் ஆக்கம்



கொண்டு உயிர்ப் பிராணிகளின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் எவ்வாறு பங்குகொள்கின்றன என்றும், உயிர்ப் பிராணிகளின் உடலிலுள்ள பகுதிகளின் வளர்ச்சி, ஊட்டம் முதலிய கிரியைகளுக்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்றும் நாம் உற்றுநோக்கி அறிய முடிகின்றது.

உயிரணுக்களினுள்ளிருக்கும் உயிர்ப்பசைப் பொருளிலும், பிற பொருள்களிலும் பிசிதங்கள் உள்ளன. பிசிதங்கள் பெரிய அணுத்திரளைகளைக் கொண்டவை. ஒவ்வொரு அனுத்திரளையும் அமினோ அமிலங்கள் [1] என்ற சிறு அலகுகளாலானது. பிசிதங்களில் இருபது விதமான அமினோ அமிலங்கள் பல்வேறு விகிதங்களிலும் கோலங்களிலும் ஒன்றுசேர்ந்துள்ளன என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். எல்லா உயிர்ப் பொருள்களிலும் இருக்கும் வேதியல் சேர்க்கைப் பொருள்களில் பிசிதங்கள்தாம் மிகவும் முக்கியமானவை. பிசிதப் பொருள்களின் உயிர்-வேதியல் ஆராய்ச்சி[2] யினால் அறிவியலறிஞர்கள் பல உண்மைகளைக் கண்டுள்ளனர். அண்மையில் அவர்கள் கந்தகம், நீரியம் தொடர்புகொண்ட நுரைப்புளியங்கள்தாம் மிகவும் உணர்வுள்ளவை என்று கண்டறிந்துள்ளனர். இந்த நுரைப்புளிய எதிர்வினை உயிரணுவின் உணர்வுடனும் கதிர் வீச்சிற்குப் பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்றும் காட்டுவதற்கு முயன்று வருகின்றனர். இதுபற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

ஊசிமுனைக் கற்றைக் கதிர்வீச்சு : ஓக் ரிட்ஜ் ஆராய்ச்சி நிலையத்திலும்[3] மாசாசூசெட்ஸ் தொழில் நுணுக்க ஆராய்ச்சி நிலையத்திலும்[4] நுரைப்புளிய வேதியல் ஆராய்ச்சி-


  1. 45.அமினோ அமிலங்கள்- amino acids.
  2. 46. உயிர்-வேதியல் ஆராய்ச்சி- biochemical study.
  3. 47.ஓக் ரிட்ஜ் ஆராய்ச்சி நிலையம்-Oak Ridge Research Institute.
  4. 48.மாசாசூசெட்ஸ் தொழில் நுணுக்க ஆராய்ச்சி நிலையம் - Massachusetts Insitate of Technology