பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

அணுவின் ஆக்கம்


போன்ற பொருள்களை உயிர் அணுக்கோல்கள் [1] என்றுவழங்குவர். இந்த உயிர் அணுக் கோல்கள் வெவ்வேறு தாவரங்களுக்கேற்றவாறும் பிராணிகளுக்கேற்றவாறும், வெவ்வேறு வளர்ச்சிப் பருவத்திற்கேற்றவாறும் தம்முள் வேறுபட்டுக் காணப்பெறும். அவற்றுள் பெரியது 1/100 அங்குலம் இருக்கும் ; இதனே நுண்ணணுப் பெருக்கியின் மூலம் நாம் காணலாம். ஒவ்வொரு வகைத் தாவரம் அல்லது பிராணிகளின் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள உயிரணுக்கோள்கள் இருக்கின்றன : மனிதனிடம் 24 சோடிகள் உள்ளன ; அஃதாவது, ஒவ்வொரு உயிரணுவிலும் 48 உயிரணுக்கோல்கள் உள்ளன. பழப்பூச்சிகளிடம் [2] 4 சோடிகளும், தானியத்திடம் 10 சோடிகளும் குங்கும நிறமுள்ள பூஞ்சக்காளானின் [3]

சோடியாக அமைக்கப் பெற்றுள்ள மானிட உயிரணுக்கோல்கள்
படம்-29 ஆ

ஒர் உயிரணுவிலுள்ள பல்வேறு 24 சோடி உயிர் மின்னிகளையும் ஒரு நேர் கோட்டில் அமைத்தால் அவை இவ்வாறு காணப்பெறும்.

சில உயிரணுக்களில் 7 சோடிகளும் அமைந்திருக்கின்றன. ஒர் உயிரியிடம் [4] எத்தனை உயிர் மின்னிகள் உள்ளன என்பதை இன்னும் அறிவியலறிஞர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆனால், எடுத்துக்காட்டாக அவர்கள் பழப் பூச்சிகளின் உயிரணுக்களில் கிட்டத்தட்ட 10,000 வெவ்வேறு உயிர் மின்னிகளும் அவற்றின் எட்டு உயிரணுக் கோல்களில் மணிகள்போல் அமைந்திருக்கின்றன என்று நம்புகின்றனர். வேறு உயர்ந்த தாவரங்களும் பிராணிகளும் (மனிதன்


  1. 59.உயிரணுக் கோல்கள் - chromosomes.
  2. 60.பழப்பூச்சி - fruit fly.
  3. 61.பூஞ்சக்காளான் - mould
  4. 62.உயிரி - organism