பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

193


உட்பட) அதே எண்ணிக்கையுள்ள உயிர் மின்னிகளைத் தாம் பெற்றிருக்கின்றன என்றும் கருதுகின்றனர்.

ஒர் உடலிலுள்ள உயிரணு மைட்டோஸிஸ்[1] எனப்படும் ஒருவகைப் பிரிவுக் கிரியை[2] யால் தானாகவே பெருக்கமடைந்து வருகிறது. இந்தக் கிரியையில் உயிரணு ஒரே மாதிரியாகவுள்ள இரண்டு 48 சோடி உயிரணுக் கோல்களையும் ஆயிரக்கணக்கான உயிர் மின்னிகளையும் உண்டாக்குகிறது. இந்த இரட்டை அடுக்கு உயிரணுக் கோல்கள் உயிரணுவின் இரண்டு எதிர்க்கோடிகளுக்கு நகர்கின்றன. தாய் உயிரணு இரண்டாகப் பிரியுங்கால் ஒவ்வொரு சேய் உயிரணுவிலும் [3] முழுமையானதாக ஒர் அடுக்கு அமைந்து விடுகின்றது.

பால் உயிரணுக்களின்[4] வளர்ச்சியில்-தாவரங்களிலும் பிராணிகளிடமுமுள்ள சூல் கருக்களும் [5] முட்டைகளும் விரைப் புழுக்களும் [6] -இவ்வாறு பிரிவுறுதல் மியோஸிஸ் [7] என்ற வேறொரு கிரியைப்படி நடைபெறுகின்றது. ஆண்களிடமும் பெண்களிடமும் நடைபெறும் இந்தக் கிரியையில், பால் உயிரணு தன்னிடமுள்ள 48 உயிரணுக்கோல்களையும் பிரித்து அவற்றில் 24-ஐ மட்டிலும் சேய் உயிரணுவிற்கு அனுப்புகிறது. ஒரு முட்டைக்கரு [8] ஒரு விரைப்புழுவால் சூல் கொள்ளும்பொழுது [9]-24 உயிரணுக்கோள்களைக் கொண்ட ஒவ்வொன்றும் - முட்டையும் விரையும் ஒன்று சேர்ந்து புதிதாய்த் தோன்றும் உயிரணுவில் 48 உயிரணுக் கோல்களாக அமைந்துவிடுகின்றன. புதிதாகக் கருவுற்ற உயிரணு மீண்டும் பிரிந்து புதிய நபரை உற்பத்தி செய்யுங்கால் அது மீண்டும் மீண்டும் 48 உயிரணுக்கோல்களைத்தான் ஒன்று சேர்க்கிறது. இந்த 48 உயிரணுக்-


53 - 14

  1. 63.மைட்டோஸிஸ் - mitosis.
  2. 64.பிரிவுக்கிரியை - process of division
  3. 65. சேய் உயிரணு - daughter call.
  4. 66. பால் உயிரணுக்கள் - sex cells.
  5. 67. eggs - சூல் கரு.
  6. 68. விரைப்புழு - sperm
  7. 69. மியோஸிஸ் - meiosis.
  8. 70. முட்டை கரு – eggcell.
  9. 71. சூல் கொள்ளு - fertilisze: