பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

197


கின்றன. அவை இயற்கைத் தேர்தலால்[1] நீக்கப்பெறுகின்றன. சிலவற்றில் உயிர் மின்னிகளில் நேரிடும் இந்தச் சடுதி மாற்றம் உயிரிக்கு இறப்பை விளைவிக்கின்றன; பிறப்பதற்கு முன்னே கூட இம்மரித்தல் நிகழ்ச்சி நடைபெற்று விடுகின்றது. இத்தகைய கொடிய சடுதி மாற்றங்கள் பிற்காலத்திய சந்ததிக்கு இறங்குவதில்லை.

1926-ல் எச். ஜே. முல்லர்[2] என்ற பேராசிரியர் ஒரு பழப்பூச்சியின் உயிர் மின்னிகள் புதிர்க்கதிர்களுக்கு உட்படுத்தப் பெற்றால் அவற்றிடம் நேரிடும் சடுதி மாற்றத்தின் விகிதத்தை அதிகரிக்கலாம் என்று கண்டார். இன்று தாம் அயனியாக்கும் கதிர் வீச்சு எல்லா உயிர்ப்பொருள்களையும் பாதிக்கும் என்று சொல்லலாம். மிகவும் ஆற்றல் வாய்ந்த கதிர்வீச்சினால் உயிரணுவிலுள்ள உயிர் மின்னிகள் மூன்று விதத்தில் பாதிக்கப்பெறுகின்றன : (1) ஏதாவது புதியதொரு பொருளை உண்டாக்குகின்றன; இது நச்சுத்தன்மையுடையதாக இருக்கும். அன்றியும், விடுவிக்கப்பெற்ற அயனிகளையும் உண்டாக்குகின்றன. இவை பல்வேறு முறைகளில் சேர்ந்து உயிரிக்குக் கேடு பயக்கின்றன, (ii) உயிர் மின்னிகளைப் போன்ற கரிய உயிரணுத்திரளைகளைத் தாக்கி அவற்றிடமுள்ள வேதியல் இணைப்புக்களைச்சிதைக்கின்றன; இச்சிதைவு உயிர் மின்னிகளேயே மாற்றுகின்றது; (iii) உயிரணுக்கோல்களையும் சிதைக்கின்றன; 20 அயனிகள் அவற்றை உடைக்கின்றன என்று அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.

அயனியாக்கும் கதிர்வீச்சினால் உயிரணுக்கோல்கள் சிதைவுறினும், அவற்றின் முனைகள் மீண்டும் ஒன்று சேர்ந்து பழைய நிலையினை அடையவே முயல்கின்றன. எனினும், பலதடவை சிதைவு நேரிட்டால், இத்துணுக்குகள் புதிய முறையில் இணைந்து நிலைமாறிய தோற்றங்களை[3] உண்டாக்குகின்றன. இத்தோற்றங்கள் குடிவழியைப் பாதிக்கச்


  1. 80. இயற்கைத் தேர்தல் - natural selection
  2. 81. எச்.ஜே.முல்லர் - H. J. Miller.
  3. 82. நிலைமாறிய தோற்றம் - aberration or translocation.