பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

அணுவின் ஆக்கம்



குருதியிலுள்ள பிசிதங்கள் குருதியுறைவதற்குத் துணை புரிகின்றன ; குருதி நிறமியின்[1] ஒரு பகுதியாக அமைகின்றன: குருதிக் குழலில் குருதியை ஏற்கத் துணைபுரிகின்றன ; தொத்து நோய்களைத் தடுத்து நிறுத்தவும் செய்கின்றன. ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில்[2] லைசின்[3] என்ற அமினோ அமிலத்தில் கதிரியக்கக் கார்பனைக் கலந்து ஆராயப்பெறுகின்றது. லைசின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத பொருள். அது இந்தக் குறியிட்ட லைசினைத்[4] தொடர்ந்து சென்று, உடலில் வேறு அமினோ அமிலங்களை உற்பத்தி செய்யும் குருதிப் பிளாஸ்மாவின் பிற பிசிதங்களை உண்டாக்கவும், சிவப்பு அணுக்களை உற்பத்திசெய்யவும் துணைசெய்கின்றது என்பதை அறிந்தனர்.

தாது உப்புக்கள் கலந்த மின்னாற்பகுபொருள்கள் எனப்படுபவை உடற் சுகாதாரத்திற்கும் உடலில் நடைபெறும் பல்வேறு கிரியைகளுக்கும் மிகவும் இன்றியமையாதவை. பெரும்பாலும் அவை கடுங்காயங்களாலும், சத்திர சிகிச்சையாலும், தொற்றுநோய் தாக்கப்பெறுதலாலும் இழக்கப்பெறுகின்றன. அண்மையில் வயிற்றுக்கடுப்பு[5] நோயினால் பல குழந்தைகள் இறந்ததற்குக் காரணம் அவர்கள் உடலில் பொட்டாசியம் உப்புச்சத்துக் குறைந்தமையே என்று கண்டறிந்தனர். கதிர்வீச்சினால் பாதிக்கப் பெற்றவர்களிடமும் பொட்டாசியம் குறைகிறது என்றும் கண்டறியப் பெற்றுள்ளது. இத்துறை ஆராய்ச்சியில் கதிரியக்கப் பொட்டாசியமும் சோடியமும் பயன்படுகின்றன.

இதுகாறும் பிசிதங்களின் வளர்ச்சியை உயிர்ப்பொருள்களிடமே உற்று நோக்கினர். இப்பொழுது இதனைச் சில கண்ணாடிப் பாத்திரங்களில் வைத்து வெளியே நடைபெறவும் செய்கின்றனர். குழிமுயலின் எலும்பு மச்சையணுக்கள், எலியின் உதரவிதானம், கினியா பன்றியின் கல்லீரல் ஆகியவை இதற்குப் பயன்படுகின்றன. இந்த மூன்று இழை-


  1. 92. குருதிநிறமி - haemoglobin.
  2. 93. ரோசெஸ்டர் பல்கலைக்கழகம்-University of Rochester.
  3. 94. லைசின் -lysine.
  4. 95. குறியிட்ட லைசின் -labelled lysine.
  5. 96. வயிற்றுக்கடுப்பு -diarrhea.