பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

203


யங்களும் பல்வேறு அமினோ அமிலங்களைப் பயன்படுத்துகின்றன. அவற்றுள் கிளிசைன்[1] , லூசைன்[2] , லைசைன்[3] என்பவை முக்கியமானவை. இந்த மூன்றிலும் கதிரியக்கக் கார்பனை இணைத்துவிட்டால், பிசித அனுத்திரளைகள் மூன்றிடங்களில் உண்டாவதை அறியலாம். இதனால் அமினோ அமிலங்கள் பிசிதத்தில் எவ்வாறு அமைகின்றன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இந்தக் கிரியைகள் உடலில் நடைபெறுவதைப்போல் வெளியிலும் நடைபெறச்செய்து ஆராயப்பெறுகின்றன. இதற்கு வேண்டிய ஆற்றல் உணவுப்பொருள்கள் எரிவதிலிருந்து கிடைக்கச் செய்தல் வேண்டும். இத்துறையில் ஆராய்ந்தவர்கள் உடலிலுள்ள அணுத்திரளைகள் பல்வேறு முறைகளில் பங்கு கொள்ளுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு வகை அணுத்திரளைகள் பொறியாக இயங்குகின்றன ; மற்றொருவகை பொறியை இயக்கத் துணைசெய்கின்றன.

லைசைன் எவ்வாறு சிதைகிறது என்பதைத் தெளிவாக ஒவ்வொரு படியையும் காண முடிகிறது. முதற்படியில் இதுகாறும் கண்டறியப்பெறாத அமினோ அடிபிக் அமிலம்[4] என்ற அமிலம் உண்டாகிறது. அன்றியும், ஆய்வாளர்கள் எல்லாப் பிராணிகளின் கல்லீரலிலும் பெப்டைடு என்ற பிசிதத்தின் கீழ்நிலை அலகு[5] இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இது எல்லா அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது ; இணைக்கப்பெறும் அமிலங்களையும் விரைவில் ஏற்றுக்கொள்ளுகிறது. இந்தப் பிசித உறுப்பு பிராணிகளின் பிசித உணவுகளின் பெரும் பகுதியாகும். கதிரியக்கக் கார்பனைக் கொண்டு கார்போஹைட்ரேட்டுகள்-அமினோ அமிலங்களின் உறவு முறைகளையும் அறிய முற்பட்டிருக்கின்றனர். லிபிட்டுகள், நியூக்ளிக் அமிலங்கள் ஆகியவற்றின் தன்மைகளும் இவ்வாறே ஆராயப்பெறுகின்றன.


  1. 97. கிளிசைன் -glycine.
  2. 98. லூசைன் -leucine.
  3. 99.லைசன் - 1ysine.
  4. 100. அமினோ அடிபிக் அமிலம் - amino adipic acid.
  5. 101. கீழ்நிலை அலகு - sub-unit.