பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருத்துவத்துறையில் அணு

209


ளெரி பொறிகள் எவ்வெவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை நாம் அறிவோம். எனினும், உற்சாகமாகவும் விழிப்பாகவும் ஆராய்ச்சிகளை நடத்தினால் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கும் காலத்திற்கும் அது பயன்படும் காலத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து விடலாம். பிளெமிங்[1] என்பார் ஒரு பூஞ்சக் காளானின்[2] எதிர்-உயிர் விளைவுகளைக்[3] கண்டறிந்ததற்கும் கணிசமான அளவுகளில் பென்சிலின் உற்பத்தி செய்யப் பெற்றதற்கும் இடையே 14 ஆண்டுகள்தாம் கடந்திருக்கின்றன. இன்று மானிட மருத்துவத்தில்[4] பென்சிலின் பயனை நாம் நன்கு அறிவோம்.

கதிரியக்க ஓரிடத்தான்கள் : நவீன மருத்துவத்தில் கதிரியக்க ஓரிடத்தான்களைப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கின்றனர். நாள்தோறும் இத்துறையில் பல்வேறு புதிய புதிய முறைகள் கண்டறியப்பெற்று வருகின்றன. கதிரியக்க ஓரிடத்தான்கள் மானிட உலகத்தைத் தாக்கிவரும் நோய்களை விடாது போரிட்டுத் தடுப்பதற்குப் பயன்படும் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களாகப் பயன்படுகின்றன; சிறப்பாக அவை பயங்கரமான புற்றுநோயைத் தீர்ப்பதற்குப் பெரிதும் பயன்படுகின்றன.

புற்று நோய் : புற்று நோய்[5] என்பது கட்டுப்பாடில்லாமல் ஒழுங்கற்று வளரும் உடலின் உயிரணுக்களால் ஏற்படும் ஒருவித நோயாகும். இந்நோய் உலகின் எல்லாப் பகுதிகளிலும் உயிர்களை ஏராளமாகக் கொள்ளை கொண்டு வருகிறது. இது எல்லாவகை உயிர்களையும் தாக்கிக் குலைக்கும் ஒரு கொடுமையான நோய். தாவர இனங்களும் இதற்கு விலக்கு இல்லை. மனிதர்களை இது எல்லா ஆண்டுப் பருவங்களிலும் தாக்குகிறது. ஆயினும், 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுள்ளவர்கள்தாம் பெரும்பாலும் இந்நோயால் அதிகமாகத் தாக்கப்பெறுகின்றனர் என்று கூறப்பெறுகின்றது. புற்று நோயில் ஏதோ ஒரு காரணத்தால் உடலின்


  1. 25. பிளெமிங் -Fleming.
  2. 26. பூஞ்சக்காளான் - mould.
  3. 27. எதிர் - உயிர் விளைவுகள் - antibiotic effects.
  4. 28. மானிட மருத்துவம் - human therapy.
  5. 29. புற்றுநோய் - cancer.
53 - 15